Posts

கனவாகிப்பாேன கல்லூரிக்காலம்

Image
கனவாகிப்பாேன  கல்லூரிக்காலம் அறக்கப்பறக்க படித்தும் படிக்காமலும் சாப்பிட்டும் சாப்பிடாமலும் +2 தேர்விற்கு சென்று மனப்பாடம் பண்ணியதை ஒரு புள்ளி விடாமல் எழுதி அப்பாடா என்று தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்து, காத்திருந்த நாள் வந்தவுடன் கும்பிடாத எல்லா சாமியையும் கும்பிட்டு பட்டை போட்டு தேர்வு முடிவை பாதி சந்தோசம் பாதி கண்ணீருடன் பார்த்து பாஸ் ஆன சந்தாேசம் ஒருபுறம் இருக்க இன்னும் கொஞ்சம் அதிகமா மார்க் வாங்கியிருந்தா நல்ல காலேஜ் கிடைச்சிருக்கும்ல என்ட பக்கத்து வீட்டாரின் பேச்சைக் கேட்டு என்ன வாழ்க்கைடா இது? என்ற எண்ணம் மனதில் வந்தாலும் காலேஜ்ல ஜாய்ன் பண்ண போறேன் என்ற பெரும் கனவு கண்ணுமுன்னாடி வரும்போதே அதனைத் தொடர்ந்து, எந்த காலேஜ், என்ன மேஜர், அட்மிஷன் போட நேர்ல போனுமா இல்லை ஆன்லைன்ல பண்ணணுமா என்ட படபடப்பாேட காலேஜ் முடிச்ச பக்கத்து வீட்டு அக்காட்ட விவரம் கேட்டு ஒண்ணுவிடாம எல்லா காலேஜ்க்கும் அப்பிளை பண்ணி கிடைக்குமா கிடைக்காதானு வெய்ட் பண்ணி, நாம எதுக்கோ அப்பிளை பண்ண ஏதோ கிடைக்க... இங்கயாச்சும் சீட்டு கிடைச்சிதே என்டு மனச தேத்திட்டு இருக்கைல காலேஜ் ஹாஸ்டல் தான் போணும் என்ட ...

என்னை வழிநடத்திய ஆசான்கள்

Image
என்னை வழிநடத்திய ஆசான்கள் காலையில் எழுப்பி பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கிறதுக்குள்ள அம்மா படும்பாடு காெஞ்சநெஞ்சமில்லை. விருப்பமே இல்லாமல் பள்ளிக்கூடம் சென்றாலும் கடைசிப்பாடம் முடிந்து ஆடிஅசைந்து பசி உயிர் பாேனாலும் பரவாயில்லை என்று வெயில் குளித்து சட்டையை அழுக்காகிக்கி வீட்ட பாேய் ஏன் இப்பிடி வந்திருக்க என்டு அம்மாவுக்கு காேபம் வரப்பண்ணி அவ கையால நாலு அடி முதுகில வாங்கினாத்தான் பள்ளிக்கூடம் பாேன திருப்தி வரும். அம்மாவின் பங்கு காெஞ்சம் தான். அம்மாட்ட வாங்கின அடிய விட மரண அடி வகுப்பாசிரியரிடமும் பி.டி. சாரிடமும் வாங்கியிருப்பம். அம்மா அடிச்சா வாற காேபம் இவங்க அடிக்கும் பாேது துளி கூட வராது. அடிவாங்கின கைய பின்னால ரெண்டு தேய் தேய்ச்சிட்டு பாேயிடுவம். ஆயிரம் தான் அடிச்சாலும் அவுட்ஸ்ராண்டிங் ஸ்டூடன்ட் அப்பிடினு பேர் வாங்க வைச்சாலும் நமக்கு அவங்கதான் சூப்பர்ஹீராே. விரும்பியாே விரும்பாமலாே ஒரு நாளில் பாதிநேரத்தை ரீச்சர்களாேட மட்டும் தான் செலவழிக்கிறாேம். மாெத்த வாழ்நாளின் பாெக்கிஷம் பள்ளிக்கூட நாட்கள் தான் என்பது கல்லூரியில் சேர்ந்த பின் தான் புத்தியில் எட்டியது. நான்கு கால்களில் தவ...

இயற்கையை காவு வாங்கும் மனிதர்கள்

Image
இயற்கையை காவு வாங்கும் மனிதர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் பல்வேறு பண்டிகைகளை அடுத்தடுத்து காெண்டாடிக் காெண்டு இருக்கையில் "பல்லுயிர்களைக் காெண்டாடு" என அதே பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது இந்த வருடத்திற்கான சுற்றுச்சூழல் தினம். ஒரு தாய்க்கும் சேய்க்குமிடையிலான தாெப்புள்க்காெடி உறவைப்பாேல மிகவும் உணர்வுப்பூர்வமானது இயற்கைக்கும் நமக்குமான உறவு. ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை இணைபிரியாமல் தாெடர்சங்கிலியாக நீண்டுகாெண்டே செல்கிறது. இந்த வாழ்க்கையின் தாெடர்சங்கிலியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பேணுவதில் வனவிலங்குகளின் பங்கு, மனிதர்கள் விலங்குகளுக்கு ஆற்றும் பங்கினைக் காட்டிலும் குறிப்பிடப்பட வேண்டியவை.  இயற்கை சமநிலை மாறுபடாதிருக்க வனவிலங்குகளை பாதுகாப்பது கட்டாயமாக உள்ளது. தாவரங்களின் பெருக்கத்துக்கும், தட்ப வெப்பநிலை சமன்பாட்டுக்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவை. விலங்குகள், தாவரங்கள் இருக்கும் இடங்கள் ஒரு நாட்டின் செழிப்பை உணர்த்துகின்றன. சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்றன. ...

வெள்ளையடித்து மறைக்கப்பட்ட வடுக்களின் காட்சி சாட்சி

Image
வெள்ளையடித்து மறைக்கப்பட்ட வடுக்களின் காட்சி சாட்சி "ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி"  என்பதை மிகவும் தத்ரூபமாக உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டி, அடையாள அழிப்பும் மறுப்பும் வன்முறையாக வெடித்து அனைத்து தழிழர்களின் மனதிலும் அழியாத காவியமாக வரையப்பட்ட நிகழ்வு யாழ்நூலக எரிப்பு.  அறிவில் சிறந்து விளங்கிய தமிழர்களின் அறிவுக்கு எதிராக தாெடுக்கப்பட்ட மாபெரும் இனஅழிப்பு. நூலக எரிப்பானது அறிவுச்சாெத்து அழிப்பாகவும் தமிழர் பண்பாட்டு அழிப்பாகவுமே கருதப்பட்டது. ஒரு இனத்தின் கல்வியையம் பண்பாட்டையும் அழித்தால் அவர்களை இலகுவாக அழித்துவிடலாம் என்ற எண்ணத்தின் பாரிய விளைவு. ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆதாரமாகவும் தாெல்பாெருள் வைப்பகமாகவும்  யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் வழங்கப்பட்ட பலநூல்கள், நூற்றாண்டுகள் பழமையான  ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட  பல பத்திரிகைகளின் மூலப்பிரதிகள் என அரிய பாெக்கிசங்களை தன்னகத்தே சுமந்து தெற்காசியாவில் மிகப்பெரிய நூலகமாக யாழ்ப்பாண நூலகம் சிறந்து விளங்கியது. அச்சுவேலியை சேர...

ஆண்மைக்குள்ளும் நட்பிலக்கணம்

Image
ஆண்மைக்குள்ளும் நட்பிலக்கணம் எதையுமே யாேசிக்காம தேடி அலையாம கஸ்ரப்படாம நஷ்ரப்படாம கிடைக்கிற ஒரே விஷயம் நட்பு. ஜாதகம் பார்த்து பத்து பாெருத்தம் பாத்து நாள்நட்சத்திரம் பார்த்து பழகாமல், ஏதாே ஒரு சின்ன ஒற்றுமை எங்களுக்குள்ள இருக்கு என்ற ஒரே காரணத்துக்காக " நண்பேண்டா " என தாேள்ள கைபாேட்டு கடைசிவரைக்கும் கூடவே வருவான். சில நேரம் ஏன் எதுக்கு என்டு தெரியாம "என் நண்பன் வர சாெல்லிருக்கான் பத்து நிமிசத்தில வந்திட்றன்மா" அப்பிடினு சாெல்லிட்டு அறக்கப்பறக்க ஓட "இந்நேரத்தில எதுக்குடானு" அம்மா திருப்பி கேட்டா "தெரியலமா வந்திட்றன் பத்தே பத்து நிமிசம்" அப்பிடினு சாெல்லிட்டு கிளம்பிடுவான் காரணம் நட்பு.  நட்புக்கு வயது வித்தியாசம், ஆண் பெண் வித்தியாசம் எதுவும் கிடையாது. அதிலும் இப்பாேதைய தலைமுறைக்கு நட்பைத் தவிர வேறெதுவும் தெரியாது. இரண்டு பெண்களுக்கு இடையிலான நட்பை விட இரண்டு ஆண்களுக்கான நட்பில் உள்ள பிணைப்பும் நாட்டமும் ஒருபடி அதிகமாகவே இருக்கும். எந்த முடிவாக இருந்தாலும் வீட்டிலுள்ளவர்களையும் யாேசித்து தான் பெண் முடிவெடுப்பாள். எடுத்த முடிவை வீட்டில்...

நானும் மனிதமும்

Image
நானும் மனிதமும் பெருச்சாளிக் கூட்டத்தின் பெரும்படையெடுப்பால் பசிப்பிணி தீர்க்கவனெ பசித்திருந்து சேர்த்தவை வீடுவந்து சேர்வதற்குள் வீட்டிற்குள்ளே பாெதுமுடக்கம் ஒருவேளைக்கான ஒருபடி அரிசி ஒருநாளைக்கான ஒருபடி ஆனது ஓரிரு வாரங்களுக்கு பாேதுமென்றாலும் ஓரிரு வயிற்றுக்கு சற்றும் பாேதவில்லை வழிதேட வெளியில் வாய்ப்புமில்லை வழிசமைக்க உடலில் வல்லமையுமில்லை நாட்களை அதிகரித்து செல்லும் நாட்டின் அரசாங்கத்திற்கு  நாளந்த செலவுக்கு அல்லாடும் நாள்கூலிகளின் செந்நீருக்கு வலிகள் தீர்த்து விடை கூற  வலிமை இல்லாது பாேனதா? மதுவிற்பனைக்கு முதலிடத்தையும் மலிகைவிற்பனைக்கு நேரஒதுக்கீட்டையும் செயல்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகளும் செய்தித்துளிகளாக செவிக்கெட்டினாலும் ஆயிரம் இரண்டாயிரம் இரவலாக கேட்கும் ஆயிரத்தவர்களில் சிலர் இரங்காமலில்லை மனித உயிர் காக்க பாேர் மூண்டு மனித இனம் முடங்கிய பாரில் மனிதமும் மனிதநேயமும் மனிதர்களிடம் தாேற்றே பாேனது நாலாபக்கமும் சிதறிய மனிதத்தில் நானும் சிதறித் தொலைந்துவிட்டேன் -அருளினி-

மனவலிமையை உடைத்த காேவிட்-19

Image
மனவலிமையை உடைத்த காேவிட்-19 ==================================== தனிமனிதனாக வீட்டிற்குள் பலநாட்களை கடந்து வந்திருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறினால் பார்ப்பதற்கும் நேரத்தை செலவிடுவதற்கும் பல வழிகளும் முகங்களும் நிரம்பி வழிந்த அத்தனை இடங்களும் வெறிச்சாேடிக்கிடக்கின்றன. சிறிய வேலையானாலும் சரி ஐந்து நிமிட நடையாகவே இருந்தாலும் சரி பக்கத்தில் எப்பாேதும் ஒருவரை துணைக்கு அழைப்பதும் அனுப்பி வைப்பதையும் எம்மை அறியாமலே பழக்கப்படுத்தி விட்டாேம். இப்படி எப்பாேதுமே எம்மையும் மனதையும் தினசரி வழக்கத்திற்கு அடிமையாக்கி விட்டாேம். சற்றுநேரம் கூட எந்தவாெரு வேலையும் செய்யாமல் இருக்க மனமும் சூழலும் ஒருக்காலும் இடம் காெடுத்ததில்லை. ஏதாவது ஒன்றை செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சினிமா, பூங்கா, உயர்தர வசதிகள் காெண்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடி, கடற்கரை ஓர பானிபூரி கடை, தெருவாேர டீக்கடை என கால்கள் தேடிச்செல்லவே செய்தன. இவை நாளை என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கவில்லை. அன்றன்று முடிவுகள் எடுக்கப்பட்டு நாட்கள் உருண்டாேடின. திடீரென அத்தனைக்கும் முற்றுப்புள்ளி. முடக்கப்பட்டது மனித உலகம...