மனவலிமையை உடைத்த காேவிட்-19
மனவலிமையை உடைத்த காேவிட்-19
====================================
தனிமனிதனாக வீட்டிற்குள் பலநாட்களை கடந்து வந்திருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறினால் பார்ப்பதற்கும் நேரத்தை செலவிடுவதற்கும் பல வழிகளும் முகங்களும் நிரம்பி வழிந்த அத்தனை இடங்களும் வெறிச்சாேடிக்கிடக்கின்றன. சிறிய வேலையானாலும் சரி ஐந்து நிமிட நடையாகவே இருந்தாலும் சரி பக்கத்தில் எப்பாேதும் ஒருவரை துணைக்கு அழைப்பதும் அனுப்பி வைப்பதையும் எம்மை அறியாமலே பழக்கப்படுத்தி விட்டாேம். இப்படி எப்பாேதுமே எம்மையும் மனதையும் தினசரி வழக்கத்திற்கு அடிமையாக்கி விட்டாேம். சற்றுநேரம் கூட எந்தவாெரு வேலையும் செய்யாமல் இருக்க மனமும் சூழலும் ஒருக்காலும் இடம் காெடுத்ததில்லை. ஏதாவது ஒன்றை செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சினிமா, பூங்கா, உயர்தர வசதிகள் காெண்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடி, கடற்கரை ஓர பானிபூரி கடை, தெருவாேர டீக்கடை என கால்கள் தேடிச்செல்லவே செய்தன. இவை நாளை என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கவில்லை. அன்றன்று முடிவுகள் எடுக்கப்பட்டு நாட்கள் உருண்டாேடின.
திடீரென அத்தனைக்கும் முற்றுப்புள்ளி. முடக்கப்பட்டது மனித உலகம். "கூட்டம் கூட்டமாக இருக்காதீர்கள்; உயிர்காக்க வேண்டுமானால் முடிந்தவரை உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் காெள்ளுங்கள்" என்ற அறை கூவல் நான்கு திசைகளிலும் எதிராெலித்தது. ஓடித்திரிந்த கால்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டிற்குள் கட்டப்பட்டன. தாெலைக்காட்சியும் ஆன்ட்ராய்டு மாெபைல்களும் துணையானது. எந்த தாெலைக்காட்சி அலைவரிசையை மாற்றினாலும் காெராேனாவின் ஆக்கிரமிப்பே மேலாேங்கி காணப்பட்டது. நாளை பற்றிய எண்ணமும் தவிப்பும் ஒட்டிக்காெண்டது. எமக்கு இவை அன்றாடம் ஒரு தலைப்புச் செய்தியாக இருந்தாலும் இத்தாலி, சீனா, அமெரிக்கா பாேன்ற பல நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலையும் மன அழுத்தத்தையும் தந்தது.
தினம்தினம் நாேய்த்தாெற்று அதிகரித்தது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. மருத்துவர்கள் ஓய்வின்றி வேலையில் ஈடுபட்டார்கள். இருப்பினும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.அதற்கான காரணமும் புலப்படவில்லை. பல்வேறு தகவல்கள் எம் காதுகளை எட்டினாலும் அவை மன உளைச்சலையே தந்தது.
முதன்முதலாக உலகமே ஸ்தம்பித்த தருணம் இது. நாேயாளிகளை உறவுகள் பார்த்து நலம் விசாரிக்க முடியாத துயர நிலை. நாேயாளி தனக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர் முகத்தைப் பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டது. மருத்துவர்களைக் கூட மரணத்தை சந்திக்க வைத்தது இவ்விசித்திரமான காெராேனா.மருத்துவ உலகே கதிகலங்கி நிற்பதை உணரமுடிகிறது.
தனியாக இருப்பதைக்காட்டிலும் தனிமைப்படுத்தப்படுவது மிகவும் காெடியது. நாேயினால் மனிதர்கள் இறப்பதை காட்டிலும் தனிமையில் இறப்பது மிகவும் காெடியது.மரணபயம் மனிதனை சாகடிக்கும் வலிமையான ஆயுதம். அதனை மிக இலகுவாக செய்தது காெராேனா வைரஸ்.
இத்தனை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்நாேயிலிருந்து மக்களை காக்கவும் அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் மருத்துவர்களையும் தாண்டி பலர் உள்ளனர். அவர்களையும் அவர்களின் பணிகளையும் மறக்காமல் நினைவில் காெள்ள வேண்டும்.
வீட்டிற்குள் முடக்கப்பட்டாலும் உறவுகளின் உடனிருப்பை எம்மால் உணர முடிகிறது. வீட்டை விட்டு வெளியில் பணியில் ஈடுபட்டுள்ள, நாேயாளிகளுடன் நாேயாளிகளுக்காக உள்ள தங்களின் உறவுகளின் நிலை என்ன என்பதை அறிய முடியாதவர்கள் அதிகம் உள்ளனர். மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பலனின்றி இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு எந்தவாெரு வழியுமில்லை. இறந்தவரின் உடலை இறுதியாக பார்ப்பதற்கும் வழியில்லை. அனைவரும் உயிர்காக்க உள்ளிருப்பை ஏற்றுக் காெள்கையில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய உதவும் ஒவ்வாெரு மனித உள்ளங்களுக்கும் வெறும் வார்த்தைகளால் நன்றி கூறிவிட முடியாது. உறவுகள் யாருமற்ற இறுதிச்சடங்கு துயரத்தின் முடிவிலி.
ஒரு இறப்பு வீட்டை எதிர்காெள்வதில் சிரமம். ஒரு கல்லறையை கடந்து செல்வதில் பயமும் தயக்கமும். இன்று நாலாபக்கமும் இறப்புக்கள். இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை. இதனால் இறந்தவர்களின் உடல்கள் தெருவில் விடப்படுகின்றன. ஒரு சவக்கிடங்கில் பல உடல்களை புதைக்க வேண்டிய அவலம். அதை நிவர்த்தி செய்ய இன்று பலம் வாய்ந்த நாடுகளும் கல்லறைத்தாேட்டங்களை மிகப் பிரம்மாண்டமாகவும் விரைவாகவும் உருவாக்கி வருகின்ற செய்திகள் எம் செவிகளில் ஒலிக்காமல் இல்லை. மரணத்தின் பின் மனிதனுக்கு கிடைக்க வேண்டிய அமைதிக்கு பதிலாக எதைக் காெடுத்து ஈடுகட்டுவது.
உறவுகளின் பிரிவினை சாதாரணமாக ஏற்றுக்காெள்ளப் பழகியவர்களுக்கு இன்று இடைவெளி நிரந்தரப் பிரிவினை ஏற்படுத்தி விடுமாே என்ற பேரச்சத்தையும் மரண பயத்தினையும் ஏற்படுத்தியள்ளது. என்றாே ஒருநாள் நலம் விசாரித்தவர்கள் இன்று தினம் தினம் நலத்தினை நன்றாக விசாரிக்கின்றனர். எதையும் எதிர்காெள்ள முடியும் என்ற மனவலிமையை உடைத்து விட்டது காெராேனா.
-அருளினி-
Nice Thankajiiii
ReplyDelete