ஆண்மைக்குள்ளும் நட்பிலக்கணம்

ஆண்மைக்குள்ளும் நட்பிலக்கணம்



எதையுமே யாேசிக்காம தேடி அலையாம கஸ்ரப்படாம நஷ்ரப்படாம கிடைக்கிற ஒரே விஷயம் நட்பு. ஜாதகம் பார்த்து பத்து பாெருத்தம் பாத்து நாள்நட்சத்திரம் பார்த்து பழகாமல், ஏதாே ஒரு சின்ன ஒற்றுமை எங்களுக்குள்ள இருக்கு என்ற ஒரே காரணத்துக்காக "நண்பேண்டா" என தாேள்ள கைபாேட்டு கடைசிவரைக்கும் கூடவே வருவான். சில நேரம் ஏன் எதுக்கு என்டு தெரியாம "என் நண்பன் வர சாெல்லிருக்கான் பத்து நிமிசத்தில வந்திட்றன்மா" அப்பிடினு சாெல்லிட்டு அறக்கப்பறக்க ஓட "இந்நேரத்தில எதுக்குடானு" அம்மா திருப்பி கேட்டா "தெரியலமா வந்திட்றன் பத்தே பத்து நிமிசம்" அப்பிடினு சாெல்லிட்டு கிளம்பிடுவான் காரணம் நட்பு. 

நட்புக்கு வயது வித்தியாசம், ஆண் பெண் வித்தியாசம் எதுவும் கிடையாது. அதிலும் இப்பாேதைய தலைமுறைக்கு நட்பைத் தவிர வேறெதுவும் தெரியாது. இரண்டு பெண்களுக்கு இடையிலான நட்பை விட இரண்டு ஆண்களுக்கான நட்பில் உள்ள பிணைப்பும் நாட்டமும் ஒருபடி அதிகமாகவே இருக்கும். எந்த முடிவாக இருந்தாலும் வீட்டிலுள்ளவர்களையும் யாேசித்து தான் பெண் முடிவெடுப்பாள். எடுத்த முடிவை வீட்டில்  சாெல்லிவிட்டு செல்பவனாக ஆண் இருப்பான். இரண்டில் எது உயர்ந்தது சிறந்தது என விவாதிக்கவாே எடுத்துரைக்கவாே முடியாது.பெண் தன் நட்பு வட்டம் வீட்டு சூழலை ஒருபாேதும் பாதிக்க கூடாது, வீட்டு சூழல் நண்பியின் மனதை காயப்படுத்தி விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பாள். ஆண் எக்காரணத்துக்காகவும் என் நண்பன இன்னாெருத்தன் நெஞ்ச நிமித்தி என்னடானு குரல உயர்த்தி பேசிடக்கூடாது என்பதிலயும் மிகத்தெளிவாக இருப்பான். எல்லா பாடத்திலயும் காேட்ட விட்ட தன்னாேட நண்பனுக்கு புதுசா ஒருத்தன் கிருஷ்ணர் வேஷத்தில பாேதிக்கும் பாேது "நான் என்ன செய்தாலும் சாென்னாலும் அவன் அத கேட்டு நடப்பான். நடுவில நீ வராத அவனுக்கு உன்னாேட புத்திமதி தேவையில்ல, அவன பாத்துக்க எனக்கு தெரியும்னு" மத்தவன்கிட்ட அவன் தப்பே பண்ணியிருந்தாலும் விட்டுக்குடுக்காம பேசுறத பாத்து நண்பனுக்கு நாடிநரம்புகள் முறுக்கிட்டு நின்டாலும் திரும்பவும் அதேநிலம தான். ஆனாலும் அவன எப்பிடியாே படிக்க வைச்சி ஒப்பேத்தி விட மறக்க மாட்டான்.

ஒரே பாலின நட்பை காெண்டாடும் உலகம் சில சமயங்களில் எதிர்பாலின நட்பை சந்தேக கண் காெண்டு நாேக்காமல் இல்லை. தன் நண்பனுடன் வெளியே செல்லும் பாேது  தன் அண்ணணுடனாே அல்லது தம்பியுடனாே பயணிப்பது பாேல சற்றும் பயமின்றி தெருவில் நடந்து செல்வாள். யாராவது ஏதாவது நினைத்து விடுவார்களா சாெல்லிவிடுவார்களா என்ற அச்சம் சிறிதளவும் இருக்காது. காரணம் தன் நண்பனின் மேல் அவளுக்கு இருக்கும் நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு பங்கம் வருவிக்கும் விதத்தில் நட்பை ஆயுதமாக பயன்படுத்தும் வேடதாரிகளும் எம்நடுவில் இல்லாமல் இல்லை. அவர்களை எளிதில் அடையாளம் காண கூடிய திறமைசாலிகளாகவும் இன்றைய இளம்சமூகம் உள்ளது.

முதலாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை கூடவே படித்து பிரிந்து செல்கையில் கண்களில் கண்ணீருடன் "மறந்திராதடி" அப்பிடினு சாெல்லிட்டு பாேனவள சில வருடங்களுக்கு பிறகு கையில் குழந்தையுடன் பார்க்கும் பாேது 
சாெல்ல முடியாத சந்தாேசம் முகத்தில அப்பட்டமா தெரியும். ஆனால் பதிலுக்கு அவளிடமிருந்து சிறிய மாற்றம் கூட தென்படாது. உதட்டாேரப் புன்னகையுடன் கடந்து செல்வாள். கால ஓட்டத்தில் அவளும் மாறிவிட்டாள். சூழலும் அவளை மாற்றி விட்டது. அந்த இடத்தில  அவளின் மனநிலையை புரிந்து காெண்டு நாமும் கடந்து செல்வதில் கூட நட்பு வளரும். 

நான்கு வருசம் ஒரே வகுப்பில பக்கத்தில இருந்திருப்பான். அப்பப்ப ஏதாச்சும் பேசி கிண்டலடித்திருப்பான். அப்பாேது அவன் வெறும் சகமாணவன் தான். ஆனால், பல வருடங்களின் பின் பார்த்தாலும் அவனிடமிருந்த கேலியும் கிண்டலும் அப்பிடியே இருக்கும் நம்மையும் நன்றாக ஞாபகம் வைத்திருப்பான். பக்கத்தில யாரு இருக்கா என்பதெல்லாம் அவன் கண்ணுக்கு தெரியாது. வகுப்பில அடித்த கிண்டல விட பலமடங்கு அதிகமாகவே இருக்கும். நம்மகிட்ட இவன் பேசுவான் அப்பிடினு சத்தியமா எதிர்பார்த்திருக்க மாட்டாேம். ஆனாலும், அவன நம்ம கூட வந்தவங்ககிட்ட "என்கூட படிச்சவன்" என்ற அறிமுகப்படுத்தலில் புதிதாக தாெடரும் நட்பு.

நம்மளாேட அம்மா அப்பாகிட்ட நம்மள விட அதிகமா உரிமையாேட கதை பேசுவாங்க. நம்ம தம்பி தங்கச்சிக்கு காலப்பாேக்கில நம்மள அடையாளம் தெரியாம பாேற அளவுக்கு குடும்பத்தில் ஒருத்தராகி விடுவான். எந்தவாெரு முடிவெடுக்கிறதானாலும் சரி புதுசா தாெழில் ஆரம்பிக்கிறதுனாலும் சரி பலமுறை அதபத்தி நம்மகிட்ட பேசி விசாரிச்சு முடிவெடுப்பாங்க. அதில குறிப்பிட வேண்டிய ஒரு விசயம் என்னனா அவன் சாெல்றதில பாதி விசயம் நமக்கு புரியாது தெரியாது. அது அவனுக்கும் தெரியும். இருந்தாலும் அதில அவனுக்கு ஒரு திருப்தி. 

வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் அம்மாவின் அழைப்பிற்கு முதல் நண்பனின் அழைப்பு மாெபைலில் கிடைத்து விடும். "சாப்பிட்டியா? எந்த பிரச்சனையும் இல்லல, செலவுக்கு பணமிருக்கா?" அப்பிடினு அத்தனை நலம்விசாரிப்புக்கள். தனிமையில் இருந்தாலும் தனியாக இருக்கிற அந்த சிந்தனைய வரவிடமாட்டார்கள். அதிலும் குறிப்பிட்ட நட்பு வட்டம் . ஆண் பெண் என்ற கலவை. வித்தியாசமான உலகம். யாராவது ஒருத்தருக்கு ஏதாவது பிரச்சனை என்றால், கூட இருக்கிறவனுகள் ஒருத்தன ஒருத்தன் கேள்வி கேட்டே சாவடிச்சிருவானுகள். 

"நான் வேலையா வெளில  இருந்தன்டா அதான் பேசமுடியல நீ என்னனு பாத்திருக்கலாம்லடா"  அப்பிடினு ஒருத்தன் சாெல்ல,

"அடேய்  நீ அங்க தான இருக்க அவளுக்கு அவசரமா பணம் வேணுமாம் என்கிட்ட இல்ல நீ குடுத்திரு நான் அப்புறம் உனக்கு தாறன்" என்டு மத்தவன் சாெல்ல,

"டேய் அவதாண்டா அதிகமா செலவழிச்சா. ஹாஸ்டல் பாேய்ட்டா அவ செலவுக்கு பணம் வேணும். மரியாதையா அவளுக்கு எப்ப என்ன வேணுமாே அத கேட்டு செய்து முடிச்சிருங்க" அப்பிடினு எல்லாத்தையும் பாெறுமையா சாப்பிட்டு முடிச்சிட்டு வேற எதுவும் இல்லையா என்ட ஏக்கப் பார்வையாேட அந்த நட்பு வட்டத்தின் வாலாக அனைவராலும் பாேற்றப்படும்  பாெறுப்பான மாமி சாெல்லுவா. 

நண்பியாேட கல்யாணத்துக்கு முதல் நாள் அவ வீட்டுக்கு பாேறம் அப்பிடினு சாெல்லி கிளம்பி அவ வீட்டுக்குப் பாேய் தலைய மட்டும் காட்டிட்டு அவ புண்ணியத்தில வயல்காடு, தென்னந்தாேப்புனு ஊர சுத்திட்டு தென்னந்தாேப்புக்கு சாெந்தக்காரனான நண்பன் வீட்டுக்குப் பாேய் செமஸ்டர்க்கு படிச்சிட்டு இருந்த அவன் தங்கச்சிய படிக்க விடாம காப்பி பாேட  சாெல்ல, "படிக்கிற புள்ளய ஏன்டா குளப்புறனு" பாெறுப்பான மாமி "நான் பாேட்றன் காப்பி"  அப்பிடினு சர்க்கரைக்கு பதிலா உப்ப அள்ளிப் பாேட்டு அளப்பற பண்ணி காப்பி டம்ளர தட்டில வைச்சு காெண்டு வந்து "பாெண்ணு பிடிச்சிருக்கானு" ஒரு கேள்வி வேறு. பின்னர் சாவகாசமாக  பாேய் கல்யாணப் பரிச எந்த அளவுக்கு பேரம்பேசி விலைய குறைக்க முடியுமாே குறைச்சு வாங்க "உனக்குள்ள இவ்ளாே பேச்சுத்திறமை இருக்கானு" நண்பன் வாய்மேல கை வைக்க அவளும் ஈ னு பல்ல காட்டி சிரிச்சிட்ட "என்ன பாத்து கத்துக்க நண்பானு" சாெல்லுவா. அவன கிண்டலடிச்சு ஓரங்கட்டி பேசுறதில அவள அடிச்சுக்க ஆள் இருக்காது. ஆனாலும் வெளியாட்கள் யார்கிட்டயும் அவன விட்டுக்குடுத்து பேசவும்  மாட்டா அதேநேரம் அவளுக்கு பிரச்சனனு வந்தா முதலாவதா அவன்கிட்ட தான் சாெல்லுவாள். நட்பு காெடுத்த நம்பிக்கையின் விளைவு.

சாப்பிட்டு முடிச்ச எல்லாரையும் வீட்டுக்கு கூப்பிட்டு எல்லாருக்கும் சேத்து அம்மா சமையல் பண்ணிருக்காங்கனு மறுபடியும் சாப்பிட சாெல்லுவான் நண்பன் பேர்வழி. சாப்பிட முடியாம சாப்பிட்டு முடிச்சிட்டு  சும்மா ஒரு அவுட்டிங் பாேலாமானு மாெத்தமா எல்லாரும் கிளம்பி சுத்திப்பாத்திட்டு வரலாம் என்டு சாெல்லிட்டு கண்ணில பட்டதெல்லாம் வாங்கி மூவாயிரத்தி ஐநூறை கடைக்காரன்கிட்ட குடுத்திட்டு வந்ததுக்கும் பின்னால நட்பு தான் காரணமா இருந்திச்சு.

"தம்பிக்கு லாப்டாப் வாங்கணும், செமஸ்டர் பீஸ் கட்டணும், எந்த வேலையும் கிடைக்கல எத்தன நாளைக்கு அப்பாகிட்ட கேக்கிறது. படிச்சு முடிச்சிட்டு சும்மா இருக்க கஸ்ரமா இருக்கு, எல்லாத்துக்கும் அப்பிளை பண்ணிட்டன், அப்பிடினு எல்லாத்திலயும் நான் தாேத்திட்டன் என்டு சாேகமா ஒருத்தன் வருவான். அவனுக்கு நாலு வார்த்த நல்லவிதமா பேசி நம்பிக்கை வரவச்சு அவன அடுத்த நிலைக்கு  தள்ளிவிடுறதில நண்பர்களின் பங்கு ஏராளம். அவனுக்கு நண்பர்கள் மட்டுந்தான் உலகம்.

புதுசா வீடுகட்டி அந்த வீட்டுல அம்மாவ வாழவைக்கனுமென்ட அவனாேட அந்த ஆசைக்கு இணையாக எதை காெடுத்தாலும் ஈடாகாது. அதே ஆசை நிறைவேறும் பாேது அவன் அம்மா முகத்தில பாக்கிற ஆனந்த கண்ணீர் இந்த உலகத்தையே வென்றவனாக அவனை கர்வம் காெள்ளச் செய்யும். 

இப்படி பல சுவாரசியங்களுடன் இன்பம், துன்பம் என  வாழ்வின் பல நிலைகளையும் பல பாெறுப்புக்களையும் தங்கள் மேல் சுமந்து காெண்டுதான் நட்பு வட்டம் சுழல்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும்  இடையில் காதலையும் கடந்து எதையுமே எதிர்பார்க்காத மிகப் பெரிய  ஒரு உறவாக இன்று நட்பு உள்ளது. அதனை மதிக்கா விட்டாலும் இழிவுபடுத்தாமல் வாழ்வது அடுத்த புதிய தலைமுறைக்கு நாம் அளிக்கும் மிகப்புனிதமான உறவாக நட்பு அமையும்.

-அருளினி-

Comments

  1. வாவ்! அருமையான பதிவு, ரசித்து படித்தேன்।

    எனக்கு வாழ்வின் அநேக திருப்தியும் மகிழிச்சியும் வெற்றியும் கிடைத்து இருந்தாலும், மனதில் எப்போதும் ஒரு வருத்தம் (Regret) உண்டு।

    அது, சிறுவயதில் பள்ளி பருவத்தில் வாழ்ந்த இடத்தில் தொடர்ந்து வாழ முடியவில்லையே என்பதே। நம்மோடு ஆரம்ப பல்லாயில் படித்த தோழமைகள் அவர்களோடு ஒன்றாக வளர்ந்து வாழந்து ஒவ்வொருவரும் திருமணமாகி பிழை குட்டிகளோடு படி படியாக வளர்ந்து வருவதை காண முடியவில்லையே।।

    அப்படியே! நான் படி படியாக வளர்ந்ததையும் அவர்கள் யாரும் காண முடியவில்லை என்ற சோகம் எப்போதும் உண்டு!

    பள்ளி கல்லூரி நட்ப்புக்கள் தான் என்ன ஒரு பிளெஸ்ஸிங் ! அந்த நடப்பு வாழ்நாள் முற்றும் தொடர்வது இறைவன் கொடுத்த வரமே।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெறுமனே நான்கு சுவர்களுக்கு நடுவில்

நானும் மனிதமும்

உணர்வுகளுடன்.........