கனவாகிப்பாேன கல்லூரிக்காலம்
கனவாகிப்பாேன கல்லூரிக்காலம்
அறக்கப்பறக்க படித்தும் படிக்காமலும் சாப்பிட்டும் சாப்பிடாமலும் +2 தேர்விற்கு சென்று மனப்பாடம் பண்ணியதை ஒரு புள்ளி விடாமல் எழுதி அப்பாடா என்று தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்து, காத்திருந்த நாள் வந்தவுடன் கும்பிடாத எல்லா சாமியையும் கும்பிட்டு பட்டை போட்டு தேர்வு முடிவை பாதி சந்தோசம் பாதி கண்ணீருடன் பார்த்து பாஸ் ஆன சந்தாேசம் ஒருபுறம் இருக்க இன்னும் கொஞ்சம் அதிகமா மார்க் வாங்கியிருந்தா நல்ல காலேஜ் கிடைச்சிருக்கும்ல என்ட பக்கத்து வீட்டாரின் பேச்சைக் கேட்டு என்ன வாழ்க்கைடா இது? என்ற எண்ணம் மனதில் வந்தாலும் காலேஜ்ல ஜாய்ன் பண்ண போறேன் என்ற பெரும் கனவு கண்ணுமுன்னாடி வரும்போதே அதனைத் தொடர்ந்து, எந்த காலேஜ், என்ன மேஜர், அட்மிஷன் போட நேர்ல போனுமா இல்லை ஆன்லைன்ல பண்ணணுமா என்ட படபடப்பாேட காலேஜ் முடிச்ச பக்கத்து வீட்டு அக்காட்ட விவரம் கேட்டு ஒண்ணுவிடாம எல்லா காலேஜ்க்கும் அப்பிளை பண்ணி கிடைக்குமா கிடைக்காதானு வெய்ட் பண்ணி, நாம எதுக்கோ அப்பிளை பண்ண ஏதோ கிடைக்க...இங்கயாச்சும் சீட்டு கிடைச்சிதே என்டு மனச தேத்திட்டு இருக்கைல காலேஜ் ஹாஸ்டல் தான் போணும் என்ட வீட்டு பஞ்சாயத்தாரின் முடிவுக்கு இணங்கி பெட்டி படுக்கைய தூக்கிட்டு நிறைய கனாக்களுடன் சினிமால பார்த்து ரசித்த காலேஜ் லைஃப்ப எதிர்பார்த்து வந்தா....அதுக்கு அப்பிடியே எல்லாம் தலைகீழ். மூணு வருசத்த எப்பிடி ஓட்டப் போறனோ ஆண்டவா...என்ற சோகத்தோட மெதுவா நகர ஆரம்பிக்கும் கல்லூரிக்காலம்.
முதல்நாள் முதல் ஷோ எவ்ளோ மாஸா இருக்குமோ அதவிட வேற லெவல்ல இருக்கும் காலேஜ் முதல்நாள். வீட்ல தூங்குற மாதிரி 7 மணி வரை தூங்கி எந்திரிச்சு குளிக்கிறதுக்கு பாத்ரூம் தேடிப்பிடிச்சு உள்ள போனா பைப்ல தண்ணி சொட்டு சொட்டா வடிய, வடியிற ஒரு சொட்ட கூட விடாம வெய்ட் பண்ணி ஒருவாளி தண்ணில குளிச்சா போதும்டா சாமினு காக்கா குளியல முடிச்சிட்டு பாதி மேக்கப் போட்டு மெஸ்ல கடைசி ஆளா சாப்பிட்டு காலேஜ்க்கு ஓடிப்போனா அங்க ஒரு கூட்டம்....என்னம்மா அங்க கூட்டம்னு போனா லேட்டா வந்தவங்கனு சொல்லி நம்ம லாஸ்ட் நின்னு உள்ள போனா செக் யுவர் ரெஸ்பெக்டிவ் க்ளாஸ்ரூம் இன் தி நோட்டீஸ் போர்டு அப்பிடினு ஒரு அறிவித்தல்.....!
முதல்நாளே தரமான சம்பவங்கள்... நமக்குனு ஒரு கூட்டம் நட்பு என்ட பேர்ல கூடும் வரைக்கும் தான். கூடிட்டா முதல் ரெண்டு செமஸ்டர் எப்பிடி போகும்னே தெரியாது.
லேட் கம்மர், நோட்டீஸ் போர்டு, கிளாஸ் ரூம் தேடல், பிரேக் டைம்னா கேன்ரீன், கேன்ரீன்னாலே டீ, ரெண்டு டிஃபன் பாக்ஸ்..அத எட்டுபேர் பங்கு போட்டு, 3 டீ வாங்கி 3/6 னு பிரிச்சு தமிழ் கிளாஸ்க்கு 15 நிமிசம் லேட்டா போய் வாங்க ஒழுங்கீனங்களானு மத்த மேஜர் முன்னாடி அசிங்கப்பட்டு அதயும் கெத்தா நினைச்சு உள்ள போய் உக்காந்து பாதி அரட்டை, பாதி குறட்டை, இடைல நாலு கமெண்டு குடுத்து, அசைன்மென்ட் சம்மிட் பண்ணாம, ஓரல் டெஸ்ட்க்கு இங்கிலிஷ் ஸ்ராஃப் வரக்கூடாதுனு சாமிட்ட வேண்டிட்டே கல்லூரி நாட்கள் ஓடிப்போகும். எக்ஸாம் வந்தா போதும்..வாட்ஸ்ஆப்பில் மெட்டீரியல் ஷேர் பண்ணி போட்டோகாப்பி போட்டு ரூம்ல இரவிரவா உக்காந்து முட்டினாலும் மண்டைல ஏறாம காலைல பாத்துக்கலாம்னு தூங்கி எந்திரிச்சு காலேஜ் போய் அடியே சொல்லிக் குடுடினு ப்ரண்ட்ட பிடிச்சு அவ சொன்ன கதைய அப்பிடியே மனப்பாடம் பண்ணிட்டு போய் எக்ஸாம் எழுதிட்டு வந்து நான் பாஸ் ஆகிடுவன்டினு ஆளாளுக்கு கட்டிப்புடிச்சு என்ட்செமஸ்டர் எக்ஸாமோட பெர்ஸ்ட் இயர் முடிஞ்சு போகும்.
செக்கண்ட் இயர் வந்ததும் மே மாசம் நடந்த தரமான சிறப்பான சம்பவங்களை வண்டிவண்டியா ஒரேநாள்ள சொல்லி முடிச்சு...காலேஜ் காலண்டர்ல எத்தன நாள் லீவுனு எண்ணி, எத்தன நாள் கிளாஸ் கட் பண்ணலாம், எத்தன நாள் காலேஜ்ல செலிபிரேஷன் இருக்கு, எப்படா அவுட்டிங் போலாம், தியேட்டர் போலாம்னு பிளான் பண்ணி, செலிபிரேஷன் அப்போ தொண்டை கட்டுற அளவுக்கு கத்தி டிசிப்பிளின் கமிட்டீகிட்ட மாட்டி ஐடி சீஸ் ஆகி அத வாங்க நல்லபிள்ளயா முகத்த வைச்சு ஐடி வாங்குறதுக்குள்ள ஒரு வழி ஆகிடுவம். எக்ஸ்ரா கிளாஸ், வால்யு எடுயுகேஷன்(value education), பார்ட் -V, மார்ச்பார்ஸ்ட் பிராக்டிஸ், பைஃன்ஆட்ஸ், ஸ்பிரிங்ஸ், பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ், ரமழான், இன்டர்காலேஜியேட் என்டு செக்கண்ட் இயர் செலிபிரேஷன்ஸ் உடன் முடிவுக்கு வரும்.
பைஃனல் இயர் வரும்போது சீனியர் என்ட கெத்து தானா வர ஆரம்பிக்கும். ரூள்ஸ் பாலோ பண்றதில்ல, ஒரு வருசத்துக்கான பத்து மணித்தியால லைஃபிரறி அவர்ஸ் முடிக்காம லாஸ்ட் வீக் கிடையா கடந்து தூங்கி வழிஞ்சு அந்த கணக்கு வழக்கு முடியும். இன்டன்ஷிப் பண்ண ஊருமுழுக்க அலைஞ்சு ஒரு இடத்த பிடிச்சு அங்க ஒரு கூட்டமா கிளம்பி போய் கத்துக்கிறோமோ இல்லையோ நல்லா ஊரசுத்திட்டு ரிப்போர்ட் மட்டும் பக்கா ப்ரஃபஷனலா ரெடி பண்ணி கெத்தா சம்மிட் பண்ணி, டாக்குமென்ரி பிலிம்க்கு ஷங்கர் லெவலுக்கு ஒரு சீனப் போட்டு காலேஜ்ல மட்டுமே சுத்தி சுத்தி ரெக்கார்ட் பண்ணி அத மாசா எடிட் பண்ணி மத்த காலேஜ்ல நடக்கிற காம்பட்டிஷன்க்கு மெயிலும் பண்ணுவம்.
எக்ஸ்ரன்ஷன் மெமரீஸ், பிராக்டிக்கல் சோதனைகள், பிறந்தநாள் பரிசுகள், கல்லூரிச் சுற்றுலா, இன்டஸ்ரியல் விசிட் என்டு வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்க்குனே சேர்த்த செல்ஃபீ என்டு போன கல்லூரிக்காலம் இன்னும் கொஞ்ச நாள்னு இருக்கைல... இனி எப்ப பாப்போம்...எப்பிடி இருப்போம் என்டு யோசிக்கிறதுக்குள்ள.. பெயார்வல் எதுவும் இல்லாம கடைசி கட்டித்தழுவல்களும் கண்ணீரும் புகைப்படங்கள் எதுவுமின்றி தொடருமென நினைத்து முடிந்த கல்லூரிக்காலம் முடிவு தெரியாமல் முற்றுப்பெற்று நிற்கிறது.
Nice pa
ReplyDelete😍❤️
ReplyDeleteMisssing Arul Santhoor Santhoor💕
ReplyDeleteVery good Arulini. You have captured every moment of your college life in a very realistic manner. Nice flow. Straight from your heart. Sense of humour also good. மூச்சு விடாம படிச்ச feeling. Just as u have narrated. You can even try making a video with the voice over with pictures of all the தரமான சம்பவங்கள்.
ReplyDelete