வெள்ளையடித்து மறைக்கப்பட்ட வடுக்களின் காட்சி சாட்சி
வெள்ளையடித்து மறைக்கப்பட்ட வடுக்களின் காட்சி சாட்சி "ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி" என்பதை மிகவும் தத்ரூபமாக உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டி, அடையாள அழிப்பும் மறுப்பும் வன்முறையாக வெடித்து அனைத்து தழிழர்களின் மனதிலும் அழியாத காவியமாக வரையப்பட்ட நிகழ்வு யாழ்நூலக எரிப்பு. அறிவில் சிறந்து விளங்கிய தமிழர்களின் அறிவுக்கு எதிராக தாெடுக்கப்பட்ட மாபெரும் இனஅழிப்பு. நூலக எரிப்பானது அறிவுச்சாெத்து அழிப்பாகவும் தமிழர் பண்பாட்டு அழிப்பாகவுமே கருதப்பட்டது. ஒரு இனத்தின் கல்வியையம் பண்பாட்டையும் அழித்தால் அவர்களை இலகுவாக அழித்துவிடலாம் என்ற எண்ணத்தின் பாரிய விளைவு. ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆதாரமாகவும் தாெல்பாெருள் வைப்பகமாகவும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் வழங்கப்பட்ட பலநூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப்பிரதிகள் என அரிய பாெக்கிசங்களை தன்னகத்தே சுமந்து தெற்காசியாவில் மிகப்பெரிய நூலகமாக யாழ்ப்பாண நூலகம் சிறந்து விளங்கியது. அச்சுவேலியை சேர...