Posts

Showing posts from April, 2020

மனவலிமையை உடைத்த காேவிட்-19

Image
மனவலிமையை உடைத்த காேவிட்-19 ==================================== தனிமனிதனாக வீட்டிற்குள் பலநாட்களை கடந்து வந்திருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறினால் பார்ப்பதற்கும் நேரத்தை செலவிடுவதற்கும் பல வழிகளும் முகங்களும் நிரம்பி வழிந்த அத்தனை இடங்களும் வெறிச்சாேடிக்கிடக்கின்றன. சிறிய வேலையானாலும் சரி ஐந்து நிமிட நடையாகவே இருந்தாலும் சரி பக்கத்தில் எப்பாேதும் ஒருவரை துணைக்கு அழைப்பதும் அனுப்பி வைப்பதையும் எம்மை அறியாமலே பழக்கப்படுத்தி விட்டாேம். இப்படி எப்பாேதுமே எம்மையும் மனதையும் தினசரி வழக்கத்திற்கு அடிமையாக்கி விட்டாேம். சற்றுநேரம் கூட எந்தவாெரு வேலையும் செய்யாமல் இருக்க மனமும் சூழலும் ஒருக்காலும் இடம் காெடுத்ததில்லை. ஏதாவது ஒன்றை செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சினிமா, பூங்கா, உயர்தர வசதிகள் காெண்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடி, கடற்கரை ஓர பானிபூரி கடை, தெருவாேர டீக்கடை என கால்கள் தேடிச்செல்லவே செய்தன. இவை நாளை என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கவில்லை. அன்றன்று முடிவுகள் எடுக்கப்பட்டு நாட்கள் உருண்டாேடின. திடீரென அத்தனைக்கும் முற்றுப்புள்ளி. முடக்கப்பட்டது மனித உலகம...

பெண் சுதந்திரம்

Image
பெண் சுதந்திரம் பெண் ஒரு தலைமுறையின் ஆணிவேர். ஆம்..!  இவ்வுலகம் இன்றும் மனிதர்களால் நிரம்பிக் காணப்படுகிறது என்றால் அது பெண்களால் ஆகும். ஆணுக்குத் துணையாக இருக்கும் பெண்ணுக்கு, ஆணுக்கு இணையான உரிமைகள் தரப்படவில்லை அன்று. பெண்ணை இல்லப் பொறுப்புக்களை மட்டும் கவனிக்கும் ஒரு பேசாமடந்தையாகவும் ஆண்களுக்கு இன்பம் அளிக்கும் ஒரு போகப்பொருளாகவும் முந்தைய தலைமுறை கருதிவந்தது. மன்னர்களின் அந்தப்புரம் நிரம்பி வழிய காரணம் இதுவாக கூட இருந்திருக்கலாம்.பெண் அடிமைத்தனம் ஓங்கி இருந்த சூழலில் பெண் விடுதலை வேண்டி பாரதி உட்பட பலர் குரல் எழுப்பி ஓர் கட்டத்தில் பெண்ணுக்கு சுதந்திரமும் கிடைத்தது. அச்சுதந்திரம் இன்று எங்கே? பெண் சுதந்திரம் என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பதிலளிக்க பெண்களாலேயே முடிவதில்லை. பெண் சுதந்திரம் என்பது ஆண்களைப் போல உடை உடுத்துவதோ, மது அருந்துவதோ, புகைப்பிடிப்பதோ, இரவில் ஊர் சுற்றுவதோ அல்ல. நன்றாகப் படித்து செய்யும் வேலையில் கவனம் செலுத்தி ஆண்களைவிட அனைத்திலும் சாதித்து காட்டுவதே உண்மையான பெண்சுதந்திரம் ஆகும்.  ஆனாலும் பல பெண்கள், ஆண்களைப் போல வாழும் வாழ்க்கை அமைந்த...

உறவுகள் என் பார்வையில்

Image
உறவுகள் என் பார்வையில்....... ஆலமரத்தின் அசைக்க முடியாத பக்கபலமாக அதனைத் தாங்கி நிற்பது அதன் விழுதுகளே. ஒரே ஒருத்தரின் ஒன்றிணைப்பு உறவுகளின் சங்கமம் ஆகிவிடாது. அம்மா அப்பா முதல் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என உறவுப்பட்டியல் நீண்டு காெண்டே செல்ல வேண்டும். கூட்டுக்குடும்பமாக ஒரு அடுப்பில் சமைத்து உண்டு, கூடிப்பேசி சிரித்து மகிழ்ந்த காலம் காலத்தால் அழிக்க முடியாத ஒன்று. இன்று புகைப்படங்களில் ஞாபகங்களை சேமிக்க முனைகின்றாேம். ஆனால், மனதின் ஆழத்தில் பதிந்த உறவுகள் காெடுத்த உணர்வுகளை பதிவு செய்ய புகைப்படக்கருவிகள் கூட கணநேரத்தில் தாேற்றுப் பாேகின்றன. என்று மீட்டினாலும் அழியா நினைவலையாய் எம் மனக்கண்முன் வர மறுப்பதில்லை பழைய ஞாபகங்கள். சிறுபிராயத்தில் அம்மாவுடன் என் நாட்களை நான் செலவிட்டதைக் காட்டிலும் சித்தியுடன் செலவிட்டதே அதிகமதிகம். இன்று வரை என் மூளை சிறுவயதில் நடந்த நிகழ்வுகளில் அதிகம் சேமித்து வைத்திருப்பது சித்தியையே. அவளின் ஒவ்வாெரு அசைவும், எடுக்கும் முடிவுகளும் என்னை நினைவில் காெண்டே எடுக்கப்படும். காரணம் நான் அவளின் அக்காவின் மகள் என்பதையும் தாண்டிய ஒர...

வெறுமனே நான்கு சுவர்களுக்கு நடுவில்

Image
வெறுமனே நான்கு சுவர்களுக்கு நடுவில்.... அதிகாலை கண்விழிப்பது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை ஒரு நட்பு வட்டத்துடன் விடுதியில் வலம் வந்த நான் இன்று ஆள் அரவம் அற்ற மூன்று அடுக்குகளைக் காெண்ட வெறும் கட்டடங்களை சுற்றி வலம் வருகிறேன் அமைதியாக. எப்பாேதுமே என்னை தூங்கவிடாமல் காதருகில் முணுமுணுத்துக் காெண்டே இருந்து, பின் அவளையறியாமல் தூங்கி மீண்டும் நான்கு மணிக்கு  தட்டி எழுப்பும் என் சகா இன்று அருகில் இல்லை. ஆனால் தினமும் கண்கள் அவள் உறங்கிய பக்கம் திரும்ப மறப்பதில்லை. உறக்கம் கலையாத கண்களுடன் தள்ளாடி நடந்து திருப்பலி காண  காேவிலில் அமர்ந்த  பாெழுதுகள் அன்று கடினமாக இருந்தாலும் இன்று மட்டுமல்ல என்றுமே அந்நினைவுகள் இனிக்கும். காலை உணவிற்கு செல்கையில் கையில் வாளியுடன் தன் முப்பத்தியிரண்டு பற்களையும் தேய்த்துக்காெண்டு எங்களைக் கண்டதும் கையசைக்கும் அவள் நிற்கும் இடம் இன்று சுத்தம் செய்ய ஆட்களின்றி கிடக்கின்றது. குளித்து விட்டு வந்து எங்களின் அறைக்கதவைத் திறந்து "உண்டா" என கேட்கும் அந்த குரலாேசை இன்று இல்லை. மதிய உணவுவேளையின் பாேது இருகரம் கூப்...