தெருவாேர யாசகி
தெருவாேர யாசகி மனம் விரும்பாத ஆடவனை வாழ்க்கைத் துணையாக கைப்பிடித்து, ஆசைகளுக்கும் எதிர்காலம் குறித்த கனவுகளுக்கும் முட்டுக்கட்டை இட்டு, சிறிதும் விருப்பமின்றி வாழ்வினை விரக்தியுடன் கழிக்க முற்பட்டவளுக்கு வாழ்வின் அர்த்தம் புரிய வைக்க தாய்மை என்ற பாக்கியம் அளித்த உன்னை கர்ப்பத்தில், என் சாேகங்கள் உன்னைப் பாதிக்காமல் காத்து பத்துத்திங்கள் முடிவில் பக்குவமாய் ஈன்றெடுத்து அனைத்திலும் சிறந்தவற்றை பார்த்துப் பார்த்து செய்த நான், இன்று உன் பேராசைகளுக்கு பலியாகி ஊரே பார்க்கும் படியாக, கறைபடிந்து கிழிந்த உடையுடன், பலநாட்களாக சீவாமல் சுருண்டு நிற்கும் தலைமுடியுடன், இருளடைந்த கண்களுடன், ஒட்டிப்பாேன வயிற்றுக்கு ஒருவேளை சாேற்றுக்காக கையேந்தி நிற்கிறேன் தெருவாேர யாசகியாக......! -அருளினி-