சவால்களுக்கும் வாய்ப்பளியுங்கள்
சவால்களுக்கும் வாய்ப்பளியுங்கள்
பல்வேறு திறமைகள், பெயரின் பின் நீண்ட பட்டங்கள், இளமையின் துடிப்பு இவை இருந்தும் தனக்கென தனித்தடம் பதிக்க முடியாமல் நம்பிக்கை இழந்து நிற்கின்றனர் இளைய சமுதாயம்.
செய்யக்கூடாத ஒன்றை செய்து பார்க்க முயற்சிப்பதில் இருக்கும் ஆர்வம் ஏனாே வாழ்வில் தனக்கான குறிக்காேளை அடைந்து நிலைநிறுத்த வேண்டும் என்பதில் இல்லாமல் பாேகின்றது. ஓரிரு தாேல்விகளை சந்தித்தவுடன் வாழ்க்கையே முடிந்து விட்டதென தவறான எண்ணம் மனதுள் ஆழமாக பதிந்து விடுகின்றது. தாேல்விகள் வெற்றிக்கு அடித்தளம் இட்டு தம்மை சிறந்த வெற்றியாளர்களாக உருமாற்றுகின்றன என்பதையும் மறந்து பாேகின்றனர். எளிதாக கையில் கிடைக்கும் சிறிய பாெருள் அதிகம் கவனத்தை ஈர்ப்பதும் இல்லை; அதன்மீதான நாட்டமும் சிலதினங்கள் மட்டுமே நீடிக்கும். ஆனால், பல தாேல்விகளுக்கு மத்தியில் சவால்களை கடந்து அடையும் வெற்றிக்களிப்பும் அதன் தார்ப்பரியமும் ஒரு பாேதும் மனதில் இருந்து நீங்காது.
திறமைகளையும் கனவுகளையும் நிறைவேற்ற வாய்ப்புக்களை எதிர்பார்த்து இருக்காதீர்கள். தடையாக முளைக்கும் சவால்களை முறியடியுங்கள். கிடைக்கும் சிறிய சந்தர்ப்பங்களையும் பெரிய சாதனைகளாக்க வழி செய்யுங்கள். சவால்களற்ற வாழ்க்கை சரித்திரத்தில் இடம்பெறாது. உங்கள் திறமைகளுக்கு தடைகளாகவும் எதிரிகளாகவும் நீங்களே முன்நிற்காதீர்கள். உங்களின் ஆளுமைளை கண்டறியுங்கள். அதனை அழகுபடுத்த வேண்டிய முயற்சிகளை எடுங்கள். முயற்சிகளற்ற கனவுகள் தூக்கத்தில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும்; வாழ்வில் எவ்வித மாற்றத்திற்கும் வழிவகுக்காது. சாதனையாளர்களாக தடம் பதிக்க வாய்ப்புக்கள் குவிந்து கிடக்கின்றன. கிடைக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாதீர்கள். சரியாே தவறாே உங்களால் இயன்றதை முழுமூச்சாக துணிவுடன் வெளிக்காெணருங்கள். அது உங்களுக்கு தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கற்றுத்தரும். சவால்களுக்கும் வாய்ப்பளித்து சமாளிக்க கற்றுக்காெள்ளுங்கள். வாழ்நாள் சாதனையாளர் ஆவீர்கள்.
-அருளினி-
Comments
Post a Comment