Posts

Showing posts from November, 2019

தனிநபர் வாகனப்பயன்பாடும் சுற்றுச் சூழல் மாசுபாடும்

Image
தனிநபர் வாகனப்பயன்பாடும் சுற்றுச் சூழல் மாசுபாடும் நம் வாழ்வில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பல்வேறு காரணங்களுக்காக பயணிக்கிறோம்.அவ்வாறு பயணிக்கும் போது எமக்குரித்துடைய சொந்த வாகனங்களையே நம்பி இருக்கிறோம்.சுதந்திரமாக எமது பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சித்ததன் விளைவாகவே இன்று பொது போக்குவரத்து சாதனங்கள் குறைவடைந்து தனிநபர் வாகனப்பயன்பாடு அதிகரித்துள்ளன. தனிநபர் வாகனப்பயன்பாடு இன்று மிகவும் அதிகரித்த ஒன்றாக காணப்படுகின்றது.அவசியத்தேவையைப் பூர்த்தி செய்த காலம் மலையேறி ஆடம்பரத் தேவையை பூர்த்தி செய்யும் சொகுசு வாகனங்களாகவும் சமூகத்தில் தமது உயர்ந்த நிலையை காட்டவும் பயன்படுத்தும் ஒரு வெளி அடையாளப் பொருளாகவும் தனிநபர் வாகனப் பாவனை உருப்பெற்று விட்டது. பத்து நிமிடம் நடந்து சென்று பொருட்கள் வாங்கும் கடைத்தெரு , காய்கறிச்சந்தை எனத்தொடங்கி பாடசாலை , கோவில் , வேலைத்தளம் , நண்பர் , உறவினர் வீடு என அனைத்திற்கும் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களாக நாம் இன்று மாறிவிட்டோம். இவ்வாகனங்கள் எமது தேவையை இலகுவாக்குகின்றன என்று கூறினால...

புதுமுகப்போராட்டங்கள்

அவசரமாக கடந்து பாேகிற நமது வாழ்க்கையில் பல்லாயிரக்கணக்கான நபர்களை கடந்து பயணிக்கின்றாேம்.தெரிந்த முகங்களை விட தெரியாத புதுமுகங்களே அதிகம். பாடசாலை, கல்லூரி, வேலைத்தளங்கள் என்று நாம் நகர்ந்து செல்லும் அனைத்து இடங்களும் எமக்கு பலரை அறிமுகம்     செய்கிறது. அறிமுகமானவர்களே அறநெறிகளை மீறும் இன்றைய சூழலில் அறிமுகமாகும் அத்தனை புதுமுகங்ளையும் நம்பி ஏமாற எத்தனிக்கின்றது எம் பலவீனமான சிறுஇதயம். எமக்கென அமைத்துவைத்திருக்கும் உறவு வட்டத்தினுள் இணைத்துக் காெள்கின்ற  ஒவ்வாெரு புதுமுகங்களும் ஏதாே ஒருவிதத்தில் எம்மிடம் எதையாே எதிர்பார்க்கின்றவையாகவே அமைகின்றன. இத்தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்துவைக்க உதவும் கரங்களாக சமூகவலைத்தளங்கள்  தம் அளப்பரிய சேவையை ஆற்றி வருகின்றன. வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்ராகிராம், ருவிட்டர் என அனைத்து வலைத்தளங்களிலும் கணக்குகளை உருவாக்கிக்காெண்டு முகம்தெரிந்த நபர்களையும் தாண்டி முகம்தெரியாத புதுமுகங்களையும் நண்பர்களாக்கி நம் நட்பு வட்டம் பெரியது என்றெண்ணி கனவுலகில் காலம் தள்ளி நிஜவுலகினை நிழல்களாக்கி விடுகிறாேம். பேருந்தில், புகையிரதத்தில்...