தனிநபர் வாகனப்பயன்பாடும் சுற்றுச் சூழல் மாசுபாடும்
நம் வாழ்வில் ஒரு
இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பல்வேறு காரணங்களுக்காக
பயணிக்கிறோம்.அவ்வாறு பயணிக்கும் போது எமக்குரித்துடைய சொந்த வாகனங்களையே நம்பி
இருக்கிறோம்.சுதந்திரமாக எமது பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்ய முயற்சித்ததன் விளைவாகவே இன்று பொது போக்குவரத்து சாதனங்கள்
குறைவடைந்து தனிநபர் வாகனப்பயன்பாடு அதிகரித்துள்ளன.
தனிநபர்
வாகனப்பயன்பாடு இன்று மிகவும் அதிகரித்த ஒன்றாக காணப்படுகின்றது.அவசியத்தேவையைப்
பூர்த்தி செய்த காலம் மலையேறி ஆடம்பரத் தேவையை பூர்த்தி செய்யும் சொகுசு
வாகனங்களாகவும் சமூகத்தில் தமது உயர்ந்த நிலையை காட்டவும் பயன்படுத்தும் ஒரு வெளி
அடையாளப் பொருளாகவும் தனிநபர் வாகனப் பாவனை உருப்பெற்று விட்டது.
பத்து நிமிடம்
நடந்து சென்று பொருட்கள் வாங்கும் கடைத்தெரு, காய்கறிச்சந்தை எனத்தொடங்கி பாடசாலை, கோவில், வேலைத்தளம், நண்பர், உறவினர் வீடு என அனைத்திற்கும்
வாகனங்களைப் பயன்படுத்துபவர்களாக நாம் இன்று மாறிவிட்டோம்.
இவ்வாகனங்கள் எமது
தேவையை இலகுவாக்குகின்றன என்று கூறினாலும் மறுப்பதற்கு இல்லை. பேருந்து
தரிப்பிடத்தில் காத்திருந்து அதிக நேரத்தை செலவிடத் தேவையில்லை. மக்கள் மத்தியில்
நெரிசல்பட்டு பயணம் செய்வதற்கு அவசியமில்லை. யாருக்காகவும் காத்திருக்க
வேண்டியதில்லை. விரும்பிய இடத்திற்கு விரும்பிய நேரத்தில் எவ்வித கட்டுப்பாடும்
இன்றி எம்மால் பயணம் செய்ய இயலும். எமது பொழுதுபோக்குகளான வானொலி, பாடல் கேட்டல்,
புத்தகம் வாசித்தல் என்பவற்றை ஒரு
தடையுமின்றியும் யாருக்கும் இடையூறு இன்றியும் செய்யமுடியும்.
இவ்வாறான பல
தேவைகளை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தித்தரக்கூடிய ஒன்றாக தனிநபர் வாகனம்
தனது சேவையை வழங்கி வருகிறது.
தேவைகளைப் பூர்த்தி
செய்வதோடு மட்டுமல்லாமல் சாலைகளில் போக்குவரத்து நெரிசலுக்கு வழி சமைப்பவையாகவும்
அமைகின்றன. தனியார் வாகனங்களால் ஒரே நேரத்தில் அதிக பயணிகளை சுமந்து செல்ல
முடிவதில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.குறிப்பிட்ட சிலமணித்துளிகளில்
முடிவடைய வேண்டிய எமது பயணம் வாகன நெரிசலால் மிகவும் தாமதமாகிறது.
வாகனப்பயன்பாடு
அதிகரித்தமையால் மனிதரின் உடலநலத்திற்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் பாதிப்பு
ஏற்படுகின்றது.சுற்றுச்சூழல் மாசுபாடு இன்று பாரிய ஒரு பிரச்சனையாக உள்ளது. நகரங்களில் காற்று மற்றும் ஒலி மாசு அதிகளவில்
அதிகரித்துள்ளது.மனிதர்கள் சுவாச,
இதய மற்றும் புற்றுநோய்களால்
பாதிக்கப்படுகின்றனர்.
வேலைக்குச்
செல்லும் நேரத்தில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள்
சிற்றெறும்புகள் போல் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது மட்டுமன்றி
அரக்கனைப்போல் புகையையும் உமிழ்ந்து கொண்டு போவதால் சூழல் மாசும் சுகாதாரக்கேடும்
அதிகரித்த வண்ணமே உள்ளன. சாலை சந்திப்பில் சிகப்பு விளக்கு எரியும் போது vQ;[pd;fs;
khj;jpuNk ஓடிக்கொண்டிருக்கும். அவை வெளியிடும்
நச்சுப்புகை சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதுடன் பச்சை விளக்குக்காக
காத்திருப்போரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
அத்துடன்
சாலைவிபத்துக்களும் அதிகரித்துள்ளதோடு நாளொன்றுக்கான
இறப்பு வீதமும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் போன்றவற்றை பயன்படுத்துவது அரசியல் பொருளாதார காரணங்களால்
தவிர்க்க இயலாமல் போய்விட்டது. இதனால் காற்று மண்டலத்தின் சராசரி வெப்ப நிலை
கணிசமான அளவு உயரும் எனவும் இதன் விளைவாக பனி உருகி கடல்மட்டமும் உயரும் என்றும்
கணிக்கப்பட்டுள்ளன.
அதிகரித்த
வாகனங்களின் பயன்பாட்டால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் கனிம வளங்களின்
சுரண்டலும் அதிகரித்துள்ளது.
ஓசோன் படலத்தை
கெடுக்கும் குளோரோ புளோரோ கார்பன் வேதியல் பொருட்களை குறைவாகப் பயன்படுத்தும்
தொழில்நுட்பம் உள்ளபோதும் இதைப்புகுத்த அரசுகள் தயாராக இல்லை. இந்தப்பொருளை
தயாரிக்கும் நிறுவனங்களின் இலாபவெறியே இன்று ஓசோன் படலத்தைப் பாதிப்படையச்
செய்கிறது. ஓசோன் அடுக்கில் ஒருவிகித இழப்பு ஏற்பட்டால் தோல் புற்றுநோய் பலமடங்கு
அதிகரிக்குமென உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
நிழலுக்காக
மரங்களைத் தேடிச்.சென்றவர்கள் இன்று பயணிகள் நிழற்குடை நோக்கி வேகநடை
போடுகின்றனர்.மனிதர்கள் உறங்குவதற்கு சாதாரண வீடு இருக்கின்றதோ இல்லையோ வாகனங்கள்
நிறுத்திவைக்க அடுக்குமாடிகள் கட்டப்படுவது மிகவும்
சாதாரண ஒரு விடயமாகி விட்டது.
“வானைத்தொடுமளவிற்கு
உயர்ந்து நிற்கும் கட்டடங்களின் பெருமூச்சினால் அச்சமுற்ற மழைமேகங்கள் மண்ணை
சந்திப்பதை நிறுத்த
மண்மீது காதல் கொண்ட ஆணிவேர்
சீமெந்தின் காலணிக்குள் சமாதி ஆகிப்போக உரமாக வந்த குப்பைகள் மரங்களின்
காலடிச்சுவட்டைத் தேடிக் களைத்து கழிவுகளாக உருப்பெற இயற்கைக் காற்றை சுவாசித்து
வெறும் தரையில் பயணpத்த பாதங்கள் தாரின் உஷ்ணம் தாங்காது விலையுயர்ந்த காலணிக்குள்
சிறைப்பட்டுப் போனது”
ஒரு தேவையைப்
பூர்த்திசெய்யும் நோக்கில் நமது எதிர்காலத்திட்டங்கள் சூழலின் பல விடயங்களை
நாசப்படுத்தும் வேலைத்திட்டங்களாகவே அமைகின்றன.
ஆடம்பரம், போட்டி, வியாபாரம் என மாறிவரும் காலகட்டத்தில்
வாகனங்களின் எண்ணிக்கையே அதிகரித்துள்ளது.வாகனங்களிலிருந்து வரும்புகை நம்மை
அச்சுறுத்தும் ஒரு மாசு என்றால் மிகையாகாது.இயந்திரத்தனமான இவ்வாழ்க்கையில்
எதிர்கால சந்ததிக்கும் பொருள் சேர்த்து வைக்கும் மனிதர்கள் கொஞ்சம் சுத்தமான
காற்றையும் விட்டுச்செல்ல எண்ணவேண்டும். இது வாகனப்புகையை கட்டுப்படுத்துவதாலே
சாத்தியமாகும். வாகனப்புகையைக் கட்டுப்படுத்த வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க
வேண்டும். பெரும்திரள் மக்கள்.போக்குவரத்தான பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க அரசும்
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கார், மோட்டார் சைக்கிள் போன்ற தனிநபர் வாகனங்கள் இன்று ஆடம்பர் பொருளாக
மாறியுள்ள நிலையில் பலவிதமான சங்கடங்களையும் ஏற்படுத்துகின்றன. இது சூழல்
பிரச்சனைக்கு அப்பாற்பட்டு பண்பாட்டுப் பிரச்சனையாக மாறிவிட்டது. அதாவது கார்
அல்லது மோட்டார் சைக்கிள் இருந்தால் தான் அந்தஸ்து உயரும் என்று கருதத்
தொடங்கியதன் விளைவின் பயனே தனிநபர் வாகனப் பயன்பாடு.
இச்சிந்தனையை
மாற்றி சூழலையும் எதிர்கால சந்ததியையும் கருத்தில் கொண்டு தனிநபர்
வாகனப்பயன்பாட்டை குறைத்து ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்.
-mUspdp
-mUspdp

Comments
Post a Comment