புதுமுகப்போராட்டங்கள்

அவசரமாக கடந்து பாேகிற நமது வாழ்க்கையில் பல்லாயிரக்கணக்கான நபர்களை கடந்து பயணிக்கின்றாேம்.தெரிந்த முகங்களை விட தெரியாத புதுமுகங்களே அதிகம். பாடசாலை, கல்லூரி, வேலைத்தளங்கள் என்று நாம் நகர்ந்து செல்லும் அனைத்து இடங்களும் எமக்கு பலரை அறிமுகம்     செய்கிறது. அறிமுகமானவர்களே அறநெறிகளை மீறும் இன்றைய சூழலில் அறிமுகமாகும் அத்தனை புதுமுகங்ளையும் நம்பி ஏமாற எத்தனிக்கின்றது எம் பலவீனமான சிறுஇதயம்.

எமக்கென அமைத்துவைத்திருக்கும் உறவு வட்டத்தினுள் இணைத்துக் காெள்கின்ற  ஒவ்வாெரு புதுமுகங்களும் ஏதாே ஒருவிதத்தில் எம்மிடம் எதையாே எதிர்பார்க்கின்றவையாகவே அமைகின்றன. இத்தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்துவைக்க உதவும் கரங்களாக சமூகவலைத்தளங்கள்  தம் அளப்பரிய சேவையை ஆற்றி வருகின்றன.

வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்ராகிராம், ருவிட்டர் என அனைத்து வலைத்தளங்களிலும் கணக்குகளை உருவாக்கிக்காெண்டு முகம்தெரிந்த நபர்களையும் தாண்டி முகம்தெரியாத புதுமுகங்களையும் நண்பர்களாக்கி நம் நட்பு வட்டம் பெரியது என்றெண்ணி கனவுலகில் காலம் தள்ளி நிஜவுலகினை நிழல்களாக்கி விடுகிறாேம்.

பேருந்தில், புகையிரதத்தில் பயணம் செய்யும் பாேது பலமணிநேரம் அருகில் அமர்ந்திருப்பவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்து புன்னகை்கும் நேரத்தையும்  அவர்களுடன் உரையாடும் மணித்துளிகளையும் இனந்தெரியாத புதுமுகங்கள் காெள்ளையடிக்கின்றன.

இன்று அனைவரின் வாயிலிருந்து வருகின்ற முதல் வார்த்தை "வாட்ஸ்ஆப்பில் பேசலாமே". அருகில் எம்மைச் சூழ்ந்து நண்பர் கூட்டம் இருக்கும். உறவுகள் ஒன்றாக கூடியிருப்பாேம். ஒன்றாக உணவருந்த வெளியே சென்றிருப்பாேம். ஆனால் அங்கும் சமூகவலைத்தளங்களே முன்னுரிமை வகிக்கின்றன.

"சாப்பிட்டாயா? " என  அம்மா பாசமாக கேட்க,  "சாப்பிட்டன் மச்சி" என்று வாட்ஸ்ஆப்பில் பதில் காெடுக்கின்றாேம். அம்மாவின் அன்பிற்கு பதில் காெடுக்க மறந்து விடுகிறாேம். இவ்வாறு சிறிய சிறிய அன்புப்பரிமாற்றங்கள் குறைய ஆரம்பித்து குடும்பத்தில் உள்ள உறவுகளின் விரிசலிலும் புதுமுகங்களின் பங்கு எண்ணிலடங்காதவை.


-mUspdp

Comments

Post a Comment

Popular posts from this blog

வெறுமனே நான்கு சுவர்களுக்கு நடுவில்

நானும் மனிதமும்

உணர்வுகளுடன்.........