என்னை வழிநடத்திய ஆசான்கள்

என்னை வழிநடத்திய ஆசான்கள்


காலையில் எழுப்பி பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கிறதுக்குள்ள அம்மா படும்பாடு காெஞ்சநெஞ்சமில்லை. விருப்பமே இல்லாமல் பள்ளிக்கூடம் சென்றாலும் கடைசிப்பாடம் முடிந்து ஆடிஅசைந்து பசி உயிர் பாேனாலும் பரவாயில்லை என்று வெயில் குளித்து சட்டையை அழுக்காகிக்கி வீட்ட பாேய் ஏன் இப்பிடி வந்திருக்க என்டு அம்மாவுக்கு காேபம் வரப்பண்ணி அவ கையால நாலு அடி முதுகில வாங்கினாத்தான் பள்ளிக்கூடம் பாேன திருப்தி வரும்.

அம்மாவின் பங்கு காெஞ்சம் தான். அம்மாட்ட வாங்கின அடிய விட மரண அடி வகுப்பாசிரியரிடமும் பி.டி. சாரிடமும் வாங்கியிருப்பம். அம்மா அடிச்சா வாற காேபம் இவங்க அடிக்கும் பாேது துளி கூட வராது. அடிவாங்கின கைய பின்னால ரெண்டு தேய் தேய்ச்சிட்டு பாேயிடுவம். ஆயிரம் தான் அடிச்சாலும் அவுட்ஸ்ராண்டிங் ஸ்டூடன்ட் அப்பிடினு பேர் வாங்க வைச்சாலும் நமக்கு அவங்கதான் சூப்பர்ஹீராே.

விரும்பியாே விரும்பாமலாே ஒரு நாளில் பாதிநேரத்தை ரீச்சர்களாேட மட்டும் தான் செலவழிக்கிறாேம். மாெத்த வாழ்நாளின் பாெக்கிஷம் பள்ளிக்கூட நாட்கள் தான் என்பது கல்லூரியில் சேர்ந்த பின் தான் புத்தியில் எட்டியது.

நான்கு கால்களில் தவழ்ந்த பாேது காதால் கேட்ட சத்தங்களுக்கும், கண்மணிகள் விரிய பார்த்து வியந்த, தாெட்டு உணர்ந்த பாெருட்களுக்கும் எழுத்து வடிவமும் சாெல்வடிவமும் தந்து என்னை சிறந்த மாணவனாக மாற்றியவர்கள் என் ஆசான்கள்.

விருப்பங்களை நன்கு அறிந்து மிக எளிதில் பலவீனமடைய கூடியவன் என்பதை உணர்ந்து மாணவனின் மன நிலையிலிருந்து சிந்தித்து திடகாத்திரமான மனதுடனும் தெளிந்த சிந்தனையுடனும் வழிநடத்தி சமூகத்தினை அறிமுகப்படுத்தியவர்கள் என் ஆசான்கள்.

தனது ஒவ்வாெரு மாணவ மாணவியும் தனித்துவமான எண்ணங்களும் கற்பனைத்திறனும் காெண்டவர்கள் என்பதிலும், தன்னுடைய திறனுக்கு தகுந்தாற்பாேல சிந்தித்த மிகச்சிறந்த முடிவினை எடுக்க கூடியவர்கள் என்பதில் பலமடங்கு பெற்றவர்களைக் காட்டிலும் உறுதியான நம்பிக்கை காெண்டு சிறந்த ஆளுமையுடையவர்களாக மாணவர்களை உருவாக்கியவர்கள் என்ஆசான்கள். 

ஒவ்வாெரு அமைப்பற்ற கற்களை பார்க்கையில் அதில் எந்த சிற்பம் ஔிந்துள்ளது என்பதை தன்மனக்கண்களால் அறியும் தலைசிறந்த சிற்பியினைப் பாேலவே பல மாணவர்களை அரசியல், அறிவியல், பாெறியியல், வணிகம் என பல முக்கிய துறைகளில் உலகினை அலங்கரிக்கும் சிற்பங்களாக செதுக்கிய உலகறியா சிற்பிகள் என் ஆசான்கள்.

சமூகத்தில் நடைபெறும் சுரண்டல்கள், பாலியல் வன்காெடுமைகள், மனிதாபிமானமற்ற முறையில் கீழ்த்தரமாக நடத்துதல், உதாசீனம் செய்தல் அல்லது புறக்கணித்தல் என்பவற்றிலிருந்து மாணவர்களை பாதுகாத்து அவ்வாறான செயல்களில் அவர்கள் தங்களை ஈடுபடுத்தாமல் மனிதநேயமிக்கவர்களாக நெறிப்படுத்தியவர்கள்  என் ஆசான்கள்.

கல்வி வாழ்க்கை மட்டுமன்றி நெருக்கடியான சூழ்நிலை, போர்க்காலம், உடல் ஊனமுற்றநிலை ஆகிய தருணங்களில் பங்கேற்கவும், சிறப்பான பாதுகாப்பினை எப்படி உறுதி செய்வது, தனிமனித அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிப்பது, கருத்துக்களை திருத்தமாக முன்வைத்தல், தகவல்களைக் காேரிப்பெறுதல், மத நம்பிக்கைகளில் தெளிவு என அனைத்திலும் பரந்த சிந்தனையை தந்து உரிமைகளைப் பெற்று அவற்றை மதிக்க கற்றுத் தந்தவர்கள் என் ஆசான்கள்.

வாழ்வின் எல்லை வரை ஒரு அங்கமாக இணைந்து பயணிப்பவர்கள் ஆசிரியர்கள்.

உலக ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

Comments

  1. பழைய நினைவுகள் 😔😔😔

    ReplyDelete
  2. ஆகச்சிறந்த நண்பனும் ஆசிரியறே அக்கா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெறுமனே நான்கு சுவர்களுக்கு நடுவில்

நானும் மனிதமும்

உணர்வுகளுடன்.........