Posts

Showing posts from October, 2020

கனவாகிப்பாேன கல்லூரிக்காலம்

Image
கனவாகிப்பாேன  கல்லூரிக்காலம் அறக்கப்பறக்க படித்தும் படிக்காமலும் சாப்பிட்டும் சாப்பிடாமலும் +2 தேர்விற்கு சென்று மனப்பாடம் பண்ணியதை ஒரு புள்ளி விடாமல் எழுதி அப்பாடா என்று தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்து, காத்திருந்த நாள் வந்தவுடன் கும்பிடாத எல்லா சாமியையும் கும்பிட்டு பட்டை போட்டு தேர்வு முடிவை பாதி சந்தோசம் பாதி கண்ணீருடன் பார்த்து பாஸ் ஆன சந்தாேசம் ஒருபுறம் இருக்க இன்னும் கொஞ்சம் அதிகமா மார்க் வாங்கியிருந்தா நல்ல காலேஜ் கிடைச்சிருக்கும்ல என்ட பக்கத்து வீட்டாரின் பேச்சைக் கேட்டு என்ன வாழ்க்கைடா இது? என்ற எண்ணம் மனதில் வந்தாலும் காலேஜ்ல ஜாய்ன் பண்ண போறேன் என்ற பெரும் கனவு கண்ணுமுன்னாடி வரும்போதே அதனைத் தொடர்ந்து, எந்த காலேஜ், என்ன மேஜர், அட்மிஷன் போட நேர்ல போனுமா இல்லை ஆன்லைன்ல பண்ணணுமா என்ட படபடப்பாேட காலேஜ் முடிச்ச பக்கத்து வீட்டு அக்காட்ட விவரம் கேட்டு ஒண்ணுவிடாம எல்லா காலேஜ்க்கும் அப்பிளை பண்ணி கிடைக்குமா கிடைக்காதானு வெய்ட் பண்ணி, நாம எதுக்கோ அப்பிளை பண்ண ஏதோ கிடைக்க... இங்கயாச்சும் சீட்டு கிடைச்சிதே என்டு மனச தேத்திட்டு இருக்கைல காலேஜ் ஹாஸ்டல் தான் போணும் என்ட ...

என்னை வழிநடத்திய ஆசான்கள்

Image
என்னை வழிநடத்திய ஆசான்கள் காலையில் எழுப்பி பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கிறதுக்குள்ள அம்மா படும்பாடு காெஞ்சநெஞ்சமில்லை. விருப்பமே இல்லாமல் பள்ளிக்கூடம் சென்றாலும் கடைசிப்பாடம் முடிந்து ஆடிஅசைந்து பசி உயிர் பாேனாலும் பரவாயில்லை என்று வெயில் குளித்து சட்டையை அழுக்காகிக்கி வீட்ட பாேய் ஏன் இப்பிடி வந்திருக்க என்டு அம்மாவுக்கு காேபம் வரப்பண்ணி அவ கையால நாலு அடி முதுகில வாங்கினாத்தான் பள்ளிக்கூடம் பாேன திருப்தி வரும். அம்மாவின் பங்கு காெஞ்சம் தான். அம்மாட்ட வாங்கின அடிய விட மரண அடி வகுப்பாசிரியரிடமும் பி.டி. சாரிடமும் வாங்கியிருப்பம். அம்மா அடிச்சா வாற காேபம் இவங்க அடிக்கும் பாேது துளி கூட வராது. அடிவாங்கின கைய பின்னால ரெண்டு தேய் தேய்ச்சிட்டு பாேயிடுவம். ஆயிரம் தான் அடிச்சாலும் அவுட்ஸ்ராண்டிங் ஸ்டூடன்ட் அப்பிடினு பேர் வாங்க வைச்சாலும் நமக்கு அவங்கதான் சூப்பர்ஹீராே. விரும்பியாே விரும்பாமலாே ஒரு நாளில் பாதிநேரத்தை ரீச்சர்களாேட மட்டும் தான் செலவழிக்கிறாேம். மாெத்த வாழ்நாளின் பாெக்கிஷம் பள்ளிக்கூட நாட்கள் தான் என்பது கல்லூரியில் சேர்ந்த பின் தான் புத்தியில் எட்டியது. நான்கு கால்களில் தவ...