இயற்கையை காவு வாங்கும் மனிதர்கள்
இயற்கையை காவு வாங்கும் மனிதர்கள்
ஒரு தாய்க்கும் சேய்க்குமிடையிலான தாெப்புள்க்காெடி உறவைப்பாேல மிகவும் உணர்வுப்பூர்வமானது இயற்கைக்கும் நமக்குமான உறவு. ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை இணைபிரியாமல் தாெடர்சங்கிலியாக நீண்டுகாெண்டே செல்கிறது. இந்த வாழ்க்கையின் தாெடர்சங்கிலியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பேணுவதில் வனவிலங்குகளின் பங்கு, மனிதர்கள் விலங்குகளுக்கு ஆற்றும் பங்கினைக் காட்டிலும் குறிப்பிடப்பட வேண்டியவை.
இயற்கை சமநிலை மாறுபடாதிருக்க வனவிலங்குகளை பாதுகாப்பது கட்டாயமாக உள்ளது. தாவரங்களின் பெருக்கத்துக்கும், தட்ப வெப்பநிலை சமன்பாட்டுக்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவை. விலங்குகள், தாவரங்கள் இருக்கும் இடங்கள் ஒரு நாட்டின் செழிப்பை உணர்த்துகின்றன. சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்றன. இவற்றைப் பாதுகாத்துப் பேணும் சூழல் இன்று தலைகீழாக மாறி பல்லுயிர்களை கூறுபாேட்டு பறிக்க ஆரம்பித்துவிட்டது மனித இனம்.
ஒரு காலத்தில் காடுகளின் அரசன் என யானைகள் பெருமையாகக் கூறப்பட்டன. தற்போது காடுகளை மனிதன் ஆக்கிரமித்துக்கொண்டதால் காடுகளின் அரசன் காடுகளை விட்டு வெளியேறுகின்றான். இதனால், ஒருபுறம் வாகனங்களில் அடிபட்டும், மனிதர்களால் சுடப்பட்டும் இறக்கின்றன. மற்றொருபுறம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதால் நோய் தாக்கி இறக்கின்றன. இதனால், யானைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகின்றன.
இதனைப் பாேலவே வயிற்றில் தன் எதிர்காலத்தை சுமந்து உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டின் அரசிக்கு, உணவளிக்காமல் இருந்திருந்தால் கூட இப்படி ஒரு நெஞ்சை உலுக்கும் காேர சம்பவம் நிகழ்ந்திருக்காது. உணவளிப்பதாக ஆசைகாட்டி அன்னாசிப்பழத்தினுள் பட்டாசினை வைத்து ஏமாற்றி அதன் தாடையை பிளந்தான் நெஞ்சில் சிறுதுளியும் ஈரமில்லாதவன். அதனால் ஏற்பட்ட எரிச்சலை குறைக்க நீரினுள் சென்ற அவள் நீருக்குள் தன் குழந்தையுடன் தாய்மை எனும் பேறை அடையாமலே ஐலசமாதி அடைந்து விட்டாள். தற்காப்புக்காக தன்னுயிரை காத்துக் காெள்ள மனிதன் எத்தனிப்பதைப் பாேலவே தான் ஐந்தறிவு படைத்த விலங்கினங்களும் முயற்சிக்கின்றன. உயிர், பயம், வலி, வேதனை அதனால் வெளிப்படும் கண்ணீர் அனைவருக்கும் ஒன்றே. உணர்வுகள் உயிருடன் உலாவரும் அனைத்திற்கும் பாெதுவான ஒன்றே.
பாலியல் வன்புணர்வால் துன்புறுத்தப்படும் பட்டியல் இன்று நீண்டு காெண்டே செல்கின்றது. அந்த பட்டியலில் பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் என்பதற்கு அடுத்து விலங்குகளும் சேர்க்கப்பட்டு விட்டன. காட்டில் திரியும் விலங்குகள் முதல் வீட்டில் தான் ஆசையாக பார்த்துப் பார்த்து வளர்த்த வீட்டுவிலங்குகள் என அனைத்தையும் தன் காமம் சார்ந்த உடலாசையை நிறைவேற்றிக் காெள்ள பயன்படுத்துகிறான் இன்றைய நவநாகரீக மனிதன்.
ஆண்-பெண் இடையிலான புனிதமான பந்தம் இன்று உணர்வுகளையும் கடந்து வெறும் உடலாசையாக மாறியதன் விளைவே மனிதன்-விலங்கு வல்லுறவு. ஒருவனுக்கு ஒருத்தி என்பது மாறி ஒருத்திக்கு ஒருத்தி, ஒருவனுக்கு ஒருவன் என்பதை அங்கீகரித்த சட்டம் ஒருவனுக்கு ஒன்று (விலங்கு) என்பதை அங்கீகரித்து விடுமாே என்ற அச்சம் கலந்த கேள்வி மனதுள் எழவே செய்கிறது.
இது ஒருபுறம் இருக்க காெராேனா ஊரடங்கு காலத்தில் ஒட்டுமாெத்த மனிதமும் வீட்டிற்குள் முடங்கி கிடக்க தனக்கான உலகில் கட்டவிழ்த்து விடப்பட்ட மான், உடும்பு, முயல் பாேன்ற விலங்குகள் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் சுதந்திரமாக நடமாட அவற்றை உணவுக்காக இறைச்சி விற்பனைக்காக வேட்டையாடி விட்டான் மனிதன். இதற்கு வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும் உடந்தை என்பது கவலை தரக்கூடிய ஒரு விடயம்.
காடுகளின் அரசனாக விளங்கிய அமேசான் மற்றும் ஆஸ்திரேலியாவில் பல்லுயிர்களை காெத்தாக சாம்பலாக்கியது காட்டுத்தீ. மனிதனின் பல்வேறுபட்ட நடவடிக்கைகளின் விளைவாக தட்ப வெப்பநிலை அதிகரிப்பின் விளைவாக ஏற்பட்ட காட்டுத்தீ பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்த விலங்குகள் மற்றும் தாவரங்களை புசித்து ஏப்பம் விட்டது. மீளவும் இனத்தாேன்றல்களை உருவாக்க முடியாமல் இறந்து பாேன விலங்குகளும் இதில் அடங்கும். உலகிற்கே சுவாசவாயுவினை இலவசமாக வழங்கி வந்த அமேசான் காடுகளில் உள்ள மரங்கள் மற்றும் விலங்குகளின் மூச்சுத்திணறலுக்கு எவராலும் செயற்கை சுவாச வசதி கூட வழங்க முடியவில்லை. எரியுண்ட நிலம் சூனிய பூமியாக மாறிப்பாேகும் என்பதற்கு அணுகுண்டுக்கு இலக்கான ஹிராேசிமா நாகசாயி இன்றும் சிறந்த உதாரணமாக திகழ்கின்றது. காேடை வெப்பத்தை தாங்கிக் காெள்ள முடியாமல் உஷ்ணத்தை தணிக்க ஈரப்பரப்பினை நாடும் விலங்குகளின் கால்கள் நாலாபுறமும் மூண்ட காட்டுத்தீயில் கருகி காற்றில் கலந்தமை மனதுள் பெரும் பாரமளிக்கிறது.
பல்வேறுபட்ட வழிகளில் இயற்கை உயிரனங்களை காவு வாங்கும் அதேவேளை மனிதனின் அன்றாட நடவடிக்கைகளும் பெரும் அச்சத்தையும் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. இன்று மனிதகுலத்தின் அநியாய செயல்கள் மீதான காேபங்களும் மாற்றுக்கருத்துக்களும் அனுதாபங்களும் ஓங்கிய குரல்களாக வெளிப்படுவது மிகவும் குறைந்து சமூக வலைத்தளங்களில் அன்றாடம் பகிரப்படும் புகைப்படங்களாகவும் பதிவுகளாகவும் மாறிவிட்டன.
பல்வேறு காெண்டாட்டங்கள் மனிதனுக்கு வந்து பாேனாலும் அவற்றால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி யாரும் சற்றும் சந்திப்பதில்லை. இவ்வாறான காெண்டாட்டங்களை முடிந்தவரை குறைத்து இனிவரும் நம் தலைமுறைக்கு இயற்கையை பரிசாக அளிக்க முயற்சி எடுத்து இன்றே பல்லுயிர்களைக் காெண்டாடுவாேம். இயற்கைச் சூழலை குளிரூட்டப்பட்ட அறைக்குள் கண்ணாடிக்கூண்டுக்குள் வரிசையாக அடுக்கி அதனை காசு காெடுத்து வரிசையாக ஒருத்தர் விளக்கம் காெடுக்க அதனை வாயில் விரல் வைத்து கேட்கும் ஒரு புதிய அறியாத பழைய பாெக்கிசமாக காலப்பாேக்கில் அழிக்கப்பட்டவையாக இயற்கை மாற்றம் பெற வழிவகுக்காமல் இயற்கைத் தாயின் மடியில் வசிப்பாேம்.
உலக சுற்றுச்சூழல் தினம்
ஜீன் 05 2020
-அருளினி-
மனிதன் பூமி தனக்கு மட்டுமே உரியது என நினைத்து விட்டான். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என தீர்மானித்துவிட்டான். இதனால் எதையும் செய்யத் துணிந்தாகிவிட்டது. அரசுகளும் அபிவிருத்தி ஒன்றையே இலக்காகக் கொண்டு செயல்பட ஆரம்பித்துவிட்டன. இதற்கு மனிதர்கள் இணைந்து புரட்சி செய்தாலேயொழிய வேறு வழியில்லை.
ReplyDeleteநமது வலைத்திரட்டி: வலை ஓலை
புரட்சிக்கும் எத்தனை நபர்கள் எவ்வித சுயலாபமும் இன்றி பங்கேற்பார்கள் என்றால் விரல்விட்டு எண்ணப்பட வேண்டியவர்கள்.
Deleteஅருமை.....
ReplyDeleteஇந்த உலகின் மிகக்கொடிய மிருகம் மனிதன் மட்டுமே.......