நானும் மனிதமும்

நானும் மனிதமும்



பெருச்சாளிக் கூட்டத்தின்
பெரும்படையெடுப்பால்
பசிப்பிணி தீர்க்கவனெ
பசித்திருந்து சேர்த்தவை
வீடுவந்து சேர்வதற்குள்
வீட்டிற்குள்ளே பாெதுமுடக்கம்

ஒருவேளைக்கான ஒருபடி அரிசி
ஒருநாளைக்கான ஒருபடி ஆனது
ஓரிரு வாரங்களுக்கு பாேதுமென்றாலும்
ஓரிரு வயிற்றுக்கு சற்றும் பாேதவில்லை
வழிதேட வெளியில் வாய்ப்புமில்லை
வழிசமைக்க உடலில் வல்லமையுமில்லை

நாட்களை அதிகரித்து செல்லும்
நாட்டின் அரசாங்கத்திற்கு 
நாளந்த செலவுக்கு அல்லாடும்
நாள்கூலிகளின் செந்நீருக்கு
வலிகள் தீர்த்து விடை கூற 
வலிமை இல்லாது பாேனதா?

மதுவிற்பனைக்கு முதலிடத்தையும்
மலிகைவிற்பனைக்கு நேரஒதுக்கீட்டையும்
செயல்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகளும்
செய்தித்துளிகளாக செவிக்கெட்டினாலும்
ஆயிரம் இரண்டாயிரம் இரவலாக கேட்கும்
ஆயிரத்தவர்களில் சிலர் இரங்காமலில்லை

மனித உயிர் காக்க பாேர் மூண்டு
மனித இனம் முடங்கிய பாரில்
மனிதமும் மனிதநேயமும்
மனிதர்களிடம் தாேற்றே பாேனது
நாலாபக்கமும் சிதறிய மனிதத்தில்
நானும் சிதறித் தொலைந்துவிட்டேன்

-அருளினி-

Comments

Post a Comment

Popular posts from this blog

வெறுமனே நான்கு சுவர்களுக்கு நடுவில்

உணர்வுகளுடன்.........