நேரம் பொன்போன்றதா?

              நேரம் பொன் போன்றதா?

இல்லை. நேரம் பொன் போன்றது என்று முன்னொரு காலத்தில் சான்றோர் வாக்காக அனைவராலும் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், உண்மையிலேயே நேரம் பொன் போன்றதா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும். இருபத்திநான்கு மணிநேரமும் ஏதோ ஒரு காரியத்தை செய்துகொண்டு தான் இருக்குறோம். அதில் உண்மையாகவே நேரத்தை வீணடிக்காமல் இருக்குறோமா என்பது வினாக்குறி.

பொன் இன்று அனைவருக்கும் மிகப்பெரிய சொத்தாக உள்ளது; அதிலும் பெண்பிள்ளையை பெற்றவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. தங்கத்தில் நகைநட்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அதற்கென எடுத்த முயற்சிகளிலும் தங்களின் வாழ்நாளையும் நேரத்தையும் தொலைத்தவர்களே அதிகம். ஓடிஓடி உழைத்து சேர்த்து வைத்த சொத்துக்களை மொத்தமாக இழக்க நேர்ந்தாலும் அவற்றை மீண்டும் எம் மனித உழைப்பால் சேர்க்க முடியும். ஆனால், அவற்றை சேர்ப்பதற்காக தொலைத்த நேரம் நாம் தலைகீழாக நின்றாலும் திருப்பி எடுக்க முடியாதவை. வீட்டில் உள்ளவர்களுடன் பேசி சிரிக்க வேண்டிய மணித்துளிகள், குழந்தையின் கைகளைப் பிடித்து கடற்கரையோரம் நடந்து செல்ல வேண்டிய இனிமையான தருணங்கள், காதலியுடன் பேசி தேநீரைக் காக்க வைக்க வேண்டிய நினைக்க இனிக்கும் ஞாபகங்கள், குடும்பமாக வெளியில் சென்று உணவருந்த வேண்டிய மாலைப்பொழுதுகள், நண்பர்களுடன் தியேட்டருக்கு சென்று விசிலடித்து கைதட்ட வேண்டிய இரவுகள் என நம்மையறியாமல் தொலைத்த நேரத்தை பொன்னைப் போல் திரும்ப பெற முடியாது. எனவே, நேரம் பொன் போன்றதல்ல, உணர்வுகள் மதிக்கும் உயிர் போன்றது. பொன்னை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் நேரத்தையும் உறவுகளையும் சேகரிப்போம். 

-அருளினி-

Comments

  1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தங்களது வலைப்பதிவை நாம் அவதானித்துள்ளோம். தொடர்ந்து எழுதுங்கள். எமது வலைத்திரட்டியுடனும் இணைந்திருங்கள். விரைவில் தங்கள் தளமும் எமது திரட்டியில் இணைக்கப்படும்.

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெறுமனே நான்கு சுவர்களுக்கு நடுவில்

நானும் மனிதமும்

உணர்வுகளுடன்.........