Posts

Showing posts from March, 2020

நேரம் பொன்போன்றதா?

Image
              நேரம் பொன் போன்றதா? இல்லை. நேரம் பொன் போன்றது என்று முன்னொரு காலத்தில் சான்றோர் வாக்காக அனைவராலும் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், உண்மையிலேயே நேரம் பொன் போன்றதா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும். இருபத்திநான்கு மணிநேரமும் ஏதோ ஒரு காரியத்தை செய்துகொண்டு தான் இருக்குறோம். அதில் உண்மையாகவே நேரத்தை வீணடிக்காமல் இருக்குறோமா என்பது வினாக்குறி. பொன் இன்று அனைவருக்கும் மிகப்பெரிய சொத்தாக உள்ளது; அதிலும் பெண்பிள்ளையை பெற்றவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. தங்கத்தில் நகைநட்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அதற்கென எடுத்த முயற்சிகளிலும் தங்களின் வாழ்நாளையும் நேரத்தையும் தொலைத்தவர்களே அதிகம். ஓடிஓடி உழைத்து சேர்த்து வைத்த சொத்துக்களை மொத்தமாக இழக்க நேர்ந்தாலும் அவற்றை மீண்டும் எம் மனித உழைப்பால் சேர்க்க முடியும். ஆனால், அவற்றை சேர்ப்பதற்காக தொலைத்த நேரம் நாம் தலைகீழாக நின்றாலும் திருப்பி எடுக்க முடியாதவை. வீட்டில் உள்ளவர்களுடன் பேசி சிரிக்க வேண்டிய மணித்துளிகள், குழந்தையின் கைகளைப் பிடித்து கடற்கரையோரம் நடந்து செல்ல வே...