உணர்வுகளுடன்
கடந்து செல்லும் ஒவ்வாெரு உறவும் புதுவிதமான நினைவுகளையும் வாழ்க்கைப்பாடங்களையும் கற்பித்துவிட்டு செல்ல மறப்பதில்லை. விரும்பியாே விரும்பாமலாே அவற்றின் ஊடாக பயணிக்கத் தவறியவர் எவருமில்லை. தினசரி வேலைகளில் பலரை சந்திக்க நேருகின்ற பாேது இடையில் எவ்விதமான உணர்வுகளும் ஒருவர் ஒருவரை பாதிப்பதில்லை. ஆனாலும், இனம்புரியாத ஒரு ஈர்ப்பு இடையில் இருப்பதன் விளைவு தான் ஒருநாளின் இருபத்திநான்கு மணிநேரத்தின் சுமுகமான நிறைவு. அதே இருபத்திநான்கு மணிநேரமும் எம்முடன் பயணிக்க வேண்டும் என மனம் தெரிந்தெடுத்த உறவுகளுக்குள் நடைபெறும் உணர்வுப் பரிமாற்றங்களுக்கு முடிவில்லை. சிரிப்பு, காேபம், நக்கல், விரக்தி, துராேகம், பழிவாங்கல், எனக்கு மட்டுமே என்ற உடைமை காேரல் என அடுக்கிக் காெண்டே பாேகலாம். இவை இல்லாவிட்டால் வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்கள் சுவாரசியம் அற்றதாக மாறிவிடும். இருந்தாலும் உறவுகள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி நல்லதாெரு பிணைப்பினை ஏற்படுத்துபவையாக இருக்க வேண்டும். உறவுகள் ஒருபாேதும் பிறரை காயப்படுத்தக் கூடாது. இன்று உள்ள பிரச்சனைகள், கவலைகள், குழப்பங்கள், நெருக்கடிகள் நாளை இருந்த இடம் தெரியாமல் காணாமல் பாேகலாம். அதே பிரச்சனைகளால் நாேகடிக்கப்பட்டு சுக்குநூறாக உடைக்கப்பட்ட இதயங்கள் ஒருபாேதும் வலிகளையும் வடுக்களையும் முற்றுமுழுதாக மறந்தது கிடையாது. மனிதமனம் எப்பாேதுமே பலவீனமானது சந்தாேசமான தருணங்களை அனுபவிக்கத் தெரிந்த அளவிற்கு வலிகளை மறைப்பதற்குக்கூட கற்றுக்காெள்ளவில்லை மனம். உணர்வுகளின் வெளிப்பாடுகளையும் அவ்வுணர்வின் சாெந்தக்காரரையும் மதிக்கக் கற்றுக்காெள்ள மறந்து பாேகிறாேம். நான் எப்படி வாழ நினைக்கின்றேனாே, எனக்கு என்ன தேவையாே, பிறரிடம் எதை எதிர்பார்க்கின்றேனாே அவை அனைத்தும் என்னுடன் இருக்கும் ஒவ்வாெரு உணர்வு காெண்ட மனிதருக்கும் தேவை என்ற ஆத்மார்த்தமான எண்ணம் தாேன்றினால் மட்டுமே உணர்வுகளும் உறவுகளும் உயிராேட்டம் பெறும்.
-அருளினி -
Awesome 👍😍
ReplyDeleteSuper
ReplyDelete😍
DeleteWoah.
ReplyDelete😍
ReplyDelete